For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை, நாகை கலெக்டர்கள் திடீர் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Thanjavur collector visits the affected area
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நாகப்பட்டனம் மாவட்ட ஆட்சித் தலைவராகமாற்றப்பட்டுள்ளார். நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் வீரசண்முகமணி தஞ்சைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுனாமி பாதித்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்து வந்த ரமேஷ் சந்த் மீனாவின் செயல்பாடுகள் குறித்துபொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் ஆட்சித் தலைவர்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று திடீரென்று மாற்றப்பட்டார். நாகை மாவட்டத்தில் சுனாமி பாதித்தபகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், வீரசண்முக மணியின்செயல்பாடுகளும் அதிருப்தியை ஏற்படுத்தின.

இந்தச் சூழ்நிலையில் அவர் தஞ்சை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தஞ்சை ஆட்சித் தலைவராக இருந்து வந்த டாக்டர்ராதாகிருஷ்ணன் நாகைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திறமை வாய்ந்த ஆட்சித் தலைவரான ராதாகிருஷ்ணன், கடந்த ஆண்டு கும்பகோணத்தில் பள்ளிக் கூடத்தில் ஏற்பட்டதீவிபத்தைத் தொடர்ந்து மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கும்பகோணம் மக்களின் மதிப்பைப் பெற்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அரைக்கம்பத்தில் தேசியக் கொடிகள்:

இதற்கிடையே சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் துக்க தினம் அனுசரிக்கப்படும்ஜனவரி 12ம் தேதியன்று அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், துக்க தினத்தன்று (12ம் தேதி) தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட அனுமதிக்குமாறு கோரி மத்திய அரசுக்குக்

கோரிக்கை விடுத்திருந்தேன்.

அந்தக் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே 12ம் தேதியன்று தமிழக அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தேசியக்

கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X