For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2,500 ஆண்டுகளில் முதன்முறையாக தடைபட்ட சந்திரமெளலீஸ்வர் பூஜை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Jeyandrarகாஞ்சி சங்கராச்சாரியார்களால் தினந்தோறும் அதிகாலையில் நடத்தப்படும் சந்திரமெளலீஸ்வருக்கான தனுர் மாஸ்ய பூஜைகள், இருசங்கராச்சாரியார்களும் இல்லாததால், நேற்று இரவுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டு பாரம்பரியம்தடைபட்டுவிட்டது.

ஜெயேந்திரர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் விஜயேந்திரர் இந்தப் பூஜைகளை தடையின்றி நடத்தி வந்தார். தினமும் 3 முறை இந்தப்பூஜைகள் நடக்கும். இந் நிலையில் நேற்று முன் தினம் விஜயேந்திரரும் கைதாகிவிட, ஜெயயேந்திரர் விடுதலையாகி வெளியே வர மாலைஆகிவிட்டது.

இதனால் நேற்று காலை 4 மணி முதல் 5 மணிக்குள் (சூர்ய உதயத்துக்கு முன்) நடத்தப்படும் சந்திரமெளலீஸ்வரருக்கான அதிகாலைப் பூஜைநடத்தப்படவில்லை.

விஜயேந்திரர் கைதான நிலையில் ஜெயேந்திரர் கலவையில் உள்ள சங்கர மடத்தில் தங்கப் போகிறார் என்ற தகவல் வந்தவுடன் உடனடியாகஇந்த சந்திரமெளலீஸ்வரரின் சிலை காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், ஜெயேந்திரர் வேலூர் சிறையில் இருந்து இந்த விடுதலையாகி கலவை மடத்துக்கு வர மாலை ஆகிவிட்டது. இதனால் ஜெயேந்திரர்நேற்று இரவில் தான் சந்திரமெளலீஸ்வரருக்கு 3 கால பூஜைகளையும் ஒட்டுமொத்தமாக நடத்தினார். இப் பூஜைகள் நள்ளிரவு 11.30க்குமுடிவடைந்தன. இதன் காரணமாக 2,500 வருட பாரம்பரியம் மீறப்பட்டுவிட்டது.

இந் நிலையில் இன்று அதி காலையில் சந்திரமெளலீஸ்வரர் பூஜையை சங்கராச்சாரியார் நடத்தினார். பின்னர் பிற்பகலில் இரு காலபூஜைகளையும் சங்கராச்சாரியார் நடத்தினார்.

கலவையில் 66, 67வது காஞ்சி பீடாதிபதிகளின் சமாதிகள் உள்ள பிருந்தாவனத்தில் இந்தப் பூஜைகளை ஜெயேந்திரர் நடத்தினார்.திரைக்குப் பின்னால் நடந்த இந்தப் பூஜைகளின்போது 3 வகையான ஆரத்திகளை எடுத்த ஜெயேந்திரர் அந்த ஆரத்தியை அங்குகுழுமியிருந்த பக்தர்களுக்குக் காட்டினார்.

இதையடுத்து ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து ஜெயேந்திரரிடம் ஆசி பெற்றனர். இந்த ஆஸ்ரமத்தின் அருகே போலீஸ் யாரையும்பார்க்க முடியவில்லை. பின்னர் பிற்பகலில் இரு கால பூஜைகளையும் சங்கராச்சாரியார் நடத்தினார்.

சிறையில் இருந்த சுமார் 61 நாள் இடைவெளிக்குப் பின் இந்தப் பூஜையை ஜெயேந்திரர் இன்று தான் முறைப்படி அந்த நேரத்தில்நடத்தியுள்ளார்.

இதற்கிடையே விஜயேந்திரரின் கைதால் சந்திரமெளலீஸ்வரர் பூஜை ஏதும் பாதிக்கப்படவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதற்குசங்கர மடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இரு பீடாதிபதிகளும் சில முறை வெளியூர் சென்றபோது இந்தப் பூஜைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டுப் போனதாகவும், இப்போதுமட்டும் பூஜை தடைபட்டுவிட்டதாகப் பேசுவதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.

ஜெ. கருத்துக்கு சங்கர மடம் மறுப்பு:

ஆனால், இதை சங்கர மடம் கடுமையாக மறுத்துள்ளது. மடத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:

இரண்டு சங்கராச்சாரியார்களும் இல்லாவிட்டாலும் சந்திரமெளலீஸ்வர பூஜை தடையின்றி நடக்கும் என்று முதல்வர் கூறியுள்ளதில்உண்மை இல்லை. அது தவறான தகவல்.

சந்திரமெளலீஸ்வரர் விக்கிரகத்திற்கு சங்கராச்சாரியார்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். இந்த விக்கிரகம் ஆதி சங்கரரால்வழங்கப்பட்டது. வேறு யாரும் இந்த விக்கிரகத்திற்கு பூஜை செய்ய முடியாது.

சங்கராச்சாரியார்கள் மட்டுமே நடத்த வேண்டிய இந்தப் பூஜை, நேற்று தடைபட்டுவிட்டது.

பீடாதிபதிகள் வெளியூர் சென்றாலும் சிலையை உடன் எடுத்துச் சென்று பூஜையைத் தொடர்வார்கள். நேற்றோ இளையவர், பெரியவர்இருவருமே சிறையில் இருந்ததால் பூஜை நடத்த முடியாமல் போய்விட்டது.

ஆதிசங்கரர் வழங்கிய ஸ்படிக லிங்கம் தான் இந்த சந்திரமெளலீஸ்வரர் சிலை. பீடாதிபதிகள் எங்கு போனாலும் இந்த சிலையையும் உடன்கொண்டு செல்வர். நவம்பர் 11ம் தேதி ஜெயேந்திரரை ஆந்திராவில் கைது செய்தபோது கூட இந்தச் சிலை அங்கு தான் இருந்தது.

அவரது கைதுக்குப் பின் சிலையை இளையவர் மடத்துக்குத் திரும்பி எடுத்து வந்து பூஜைகளைத் தொடர்ந்தார் என்கின்றனர் மடத்தின்நிர்வாகிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X