For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 7,968 பேர் பலி: 376 கிராமங்கள் அழிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை - பெங்களூர்:

House Construction work in Nagai
சுனாமி அலையால் 376 கடலோர கிராமங்கள் தாக்கப்பட்டதாகவும், அதில் வசித்த 8.9 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தமிழக அரசுதெரிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:

சுனாமி அலை தாக்குதலில் மொத்தம் 7,968 பேர் உயிரிழந்துள்ளனர். 1.2 லட்சம் வீடுகள் மட்டும் குடிசைகள் இடிந்து போய்விட்டன. 1.02லட்சம் ஹெக்டேர் நிலம் நாசமாகியுள்ளது. 3,324 பேர் காயமடைந்துள்ளனர். 9,559 கால்நடைகள் பலியாயின.

31,414 கட்டுமரங்களும், 4,195 இயந்திரப் படகுகள் உட்பட 14,506 படகுகளும் உடைந்து போய்விட்டன. 1,38 லட்சம் வலைகள்சேதமடைந்துள்ளன. ராணுவம், மாநில போலீஸார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 4.99 லட்சம் பேர் பாதுகாப்பானஇடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 412 நிவாரண முகாம்களில் 3.09 லட்சம் பேர் தங்கியுள்ளனர். 547 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

சுனாமி கண்டறியும் கருவி:

இதற்கிடையே இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்தியக் கடல் பகுதியில் சுனாமி அலைகளை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள்பொருத்தப்பட்டுவிடும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் கடல்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சுனாமி அலைகளை முன்கூட்டியே அறியும் கருவி அமைப்பது தொடர்பான வேலைகளில் கடலின் ஆழத்தில் நடைபெறும் மாற்றங்களைஅறிவது, அந்தத் தகவல்களை ஒலியலைகளை மாற்றுவது, இது தொடர்பான மென்பொருட்களை உருவாக்குவது ஆகியவை அடங்கும்.

இதன் மூலம் சுனாமி அலையின் வேகம், எப்போது அது கரையைத் தாக்கும், எந்தப் பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கும் போன்றதகவல்களை அறிந்து கொள்ள முடியும். ரூ.125 கோடி செலவில் இந்தக் கருவிகள் கடலில் பொறுத்தப்படும்.

இமயமலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சிக்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X