For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் கட்டுப்பாட்டில் வீர சைவ மடம்!

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

Kanchi Mutt கும்பகோணத்தில் உள்ள பழம் பெரும் வீர சைவ மடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. காஞ்சி மடத்தை தனது கட்டுப்பாட்டில்எடுப்பதற்கு ஒரு முன் மாதிரியாகவே இந்த மடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்று இந்த வீர சைவ மடம். இந்த மடத்துக்கு ஆதி சங்கரர் விஜயம் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த பழம் பெரும் மடத்தில் பெருமளவில் நிதி முறைகேடு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன.

நிதி முறைகேடுகள்:

மடத்தின் முந்தைய மடாதிபதியான சாந்ததேவ சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் (தற்போதைய மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகள்) மடத்துக்குச் சொந்தமான நிதியை பெருமளவில் முறைகேடாகப் பயன்படுத்தியதாக கடந்த 2002ம் ஆண்டு கும்பகோணம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், மடத்தை அரசு கையகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிடடது. இருப்பினும் இந்த உத்தரவு இத்தனை காலமாகஅமல்படுத்தப்படவில்லை.

வெளியேற மடாபதிக்கு உத்தரவு:

இந் நிலையில் திங்கள்கிழமை திடீரென்று மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவருடன் இருந்தவர்களைஉடனடியாக மடத்தை விட்டு வெளியேறுறுமாறு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

முதலில் அவர்கள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். ஆனால், கைது நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்துமடாதிபதியும் மற்றவர்களும் மடத்தை விட்டு வெளியேறினர்.

போர்டு தொங்குகிறது:

தற்போது மடம் பூட்டப்பட்டு வெளியே ஒரு போர்டு தொங்க விடப்பட்டுள்ளது. அதில், இந்த மடம் இந்து அறநிலையத்துறையால்கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக தக்காராக சுவாமிமலை திருக்கோவில் துணை ஆணையர் தனபால் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில்எழுதப்பட்டுள்ளது.

நான் பெங்களூர் பேறேன்: மடாதிபதி

மடத்தை திடீரென்று அரசு கையகப்படுத்தியது குறித்து மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும்தெரிவித்துள்ளார். 2 வருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திடீரென்று மடத்தை எடுதுக் கொண்டது நியாயமற்ற செயல்.என்னை வலுக்கட்டாயமாக மடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

மடத்திற்கு உள்ளே 6 ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றுக்கு தினசரி 3 வேளை பூஜை செய்ய வேண்டும். அதை யார் செய்யப் போகிறார்கள்?நான் பெங்களூர் சென்று அங்கு தங்கப் போகிறேன் என்றார்.

(வீர சைவ மடங்கள் என்பது அடிப்படையில் கர்நாடக மாநிலம் லிங்காயத்து சமுதாயத்தினரைச் சேர்ந்த மடங்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது)

அவராகவே வெளியேறினார்:

ஆனால் மடாதிபதியே மடத்தை விட்டு வெளியேற முன் வந்ததாக மடத்தின் தற்காலிக தக்காராக நியமிக்கப்பட்டுள்ள தனபால் கூறுகிறார்.அவர் கூறுகையில், முந்தைய மடாதிபதி செய்த பொருளாதார முறைகேடுகளை ஒத்துக் கொண்டு தானே மடத்தை அரசிடம் ஒப்படைப்பதாகஜனவரி 7ம் தேதி தற்போதைய மடாதிபதி தெரிவித்தார்.

அவரே மடத்தின் அனைத்து சாவிகளையும் எங்களிடம் ஒப்படைத்தார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத் எதிர்ப்பு:

இதற்கிடையே கும்பகோணம் மடத்தை அரசு கையகப்படுத்தியுள்ளதற்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்து மதத்தின் மீது அரசு மேற்கொண்டுள்ள போர் இது என்று அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.எம்.விஸ்வநாதன்கூறியுள்ளார்.

வழக்கு போட்ட நிர்வாகி திடீர் மரணம்:

இதற்கிடையே வீர சைவ மடத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை எதிர்த்து கும்பகோணம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்மடத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந் நிலையில் ஹண்டி திடீரென மரணமடைந்தார்.

அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரச்சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு ஹண்டி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

காஞ்சி மடத்தை அரசு கையகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் ஒரு டிரையல் ரன்னாகவே கும்பகோணம் வீர சைவமடத்தை அரசு கையகப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X