For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலவை மடத்துக்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு?

By Staff
Google Oneindia Tamil News

கலவை:

Jeyandrar வழக்கு விசாரணை முடியும் வரை ஜெயேந்திரர் கலவையிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும், மடத்துக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தன் மீதுள்ள வழக்குகளின் விசாரணை முடியும் வரை ஜெயேந்திரர் கலவையிலேயே சில காலம் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. சங்கர மடத்தில் இருப்பது போல் வசதிகளை ஏற்படுத்தித் தர புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே கலவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதாகவும் மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே கலவை மடத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.கலவையில் ஜெயேந்திரரின் உயிருக்கு கூலிப்படையினரின் அச்சுறுத்தல் இருப்பதாக மட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ராணுவ அதிகாரி ஒருவர் கலவை மடத்திற்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். விரைவில் மடத்திற்குமத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மனு இல்லை: வக்கீல்

ஜெயேந்திரருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரும் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படமாட்டாது என்று காஞ்சி மட வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார்.

கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரை அவரது சண்முகம் சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்திலிருந்து எங்களுக்குஇதுவரையில் தகவல் வரவில்லை. இந்த செய்தியை பத்திரிக்கைகளில் படித்து தெரிந்து கொண்டோம்.

நாளை ஜெயேந்திரரின் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருதோம். இது தொடர்பாகஜெயேந்திரரின் அனுமதியைப் பெற வந்தேன். ஆனால், அவர் மெளன விரதத்தில் இருப்பதால் எதுவும் பேசவில்லை.

எனவே நாளை உச்ச நீதிமன்றத்தில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்பட மாட்டாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை நகல்வழங்கப்பட்டு விட்டால், ஜெயேந்திரரின் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றம் செல்லத் தேவையில்லை என்றுகூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X