For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்திரப் பதிவு அலுவலகங்களில் அதிரடி சோதனை: ஏராளமாய் சிக்கிய லஞ்சப் பணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை நடத்திஊழியர்களிடம் இருந்து ஏராளமான பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஊழலில் திளைக்கும் முக்கிய அலுவலகங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களும் அடக்கம்.

இந்த அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் லஞ்சத்தில் திளைப்பவர்கள் தான்.

சொத்துக்களை வாங்கும்போதும், விற்கும்போதும் அவற்றின் மதிப்பிற்கேற்ப வரி கட்ட வேண்டும். இந்த ஊழியர்களுக்குலஞ்சத்தைத் தட்டிவிட்டுவிட்டால் சொத்துக்களின் விலையை மார்க்கெட் ரேட்டை விட குறைத்து மதிப்பிட்டு, அரசுக்கு குறைந்தவரி மட்டும் செலுத்தினால் போதும் என்ற சலுகையை வழங்குவார்கள்.

மேலும் சில புரோக்கர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலி முத்திரைத் தாள்களை சில ஊழியர்கள் பயன்படுத்தியதும் உண்டு.இதனால் முத்திரைத் தாள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானமும் அவுட்.

வருவாய்த்துறையின் கீழ் வரும் இந்த அலுவகங்களினால் அரசுக்கு வரும் வருவாயைவிட ஊழியர்களில் பெரும்பாலோருக்குகிடைக்கும் வருவாய் அளவிட முடியாதது. ஆண், பெண் பாரபட்சமின்றி இருபாலாரும் கொஞ்சமும் சூடு, சொரணையின்றி இந்தஅலுவலகங்களில் லஞ்சம் வாங்குவார்கள்.

அவ்வப்போது இந்த அலுவலகங்களில் லஞ்ச-ஒழிப்புப் போலீஸ் சோதனை நடப்பதும், அதில் லஞ்சப் ஏராளமான பணம்சிக்குவதும், ஊழியர்களில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதும், சிலர் சஸ்பெண்ட் செய்யப்படுவதும் உண்டு.அந்த வகையிலான ரெய்ட் நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் இந்த அலுவலகங்களில் நேற்று மாலையில் தொடங்கிய ரெய்டுநள்ளிரவு வரை நீடித்தது.

கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகம், தஞ்சாவூர், கரூர், கீரனூர், ஆலங்குடி, பொன்னமராவதி, பாளையங்கோட்டை ஆகியஇடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனையில்இறங்கினர்.

இரவிலும் நீடித்த இந்த சோதனையின்போது, பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்கள், பத்திரப் பதிவுக்கு வந்திருந்த பொதுமக்கள்ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான வகையில் அலுவலகத்தில் திரிந்த நபர்களையும் (இவர்கள் புரோக்கர்கள், இவர்கள் மூலமாகத் தான் லஞ்சம்கைமாறும். கையில் மஞ்சப் பையுடன் அலுவலகங்களில் சுற்றிக் கொண்டிருப்பார்கள்) போலீஸார் பிடித்துச் சென்று தீவிரமாகசோதனையிட்டனர்.

இந்த அதிரடி சோதனையின்போது கணக்கில் வராத ஏராளமாண பணம் (எல்லாமே லஞ்சப் பணம்), சந்தேகத்திற்கிடமானஆவணங்கள் ஆகியவை சிக்கின.

போலி முத்திரைத் தாள்கள் ஏதும் சிக்கியதா என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X