திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கத் தேவையான 2000 மெட்ரிக் டன் நெய்யை வழங்க ஆவின் நிறுவனத்திற்கு ஆர்டர்கிடைத்துள்ளது.
சட்டசபையில், பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் இதுகுறித்துக் கூறுகையில், திருப்பதிதேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்படும் லட்டுக்குத் தேவையான நெய்யை சப்ளை செய்ய ஆவின் நிறுவனத்திற்கு ஆர்டர்கிடைத்துள்ளது.
அதன்படி 2000 மெட்ரிக் டன் நெய் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்படும். இந்த ஆர்டரின் பேரில் இதுவரை 1300மெட்ரிக் டன் நெய் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் ரூ. 131 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது. ஆனால் தற்போது ரூ. 22 கோடிஅளவுக்கு லாபத்தில் இயங்கி வருகிறது என்றார் ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications