சேலம்: லாட்ஜ் இடிந்து 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் பழமையான லாட்ஜ் ஒன்று இடிந்து தரைமட்டமானதில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம், டாக்டர் சுப்பராயன் சாலையில் பேலஸ் திரையரங்கம் அருகே பழமையான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. சுகவனேஸ்வரர்கோவிலுக்கு சொந்தமான மிகவும் பழமையான இந்த விடுதியின் மாடியில் 18 அறைகள் உள்ளன. கீழ் பகுதியில் கடைகள்,தொலைபேசி பூத் ஆகியவை உள்ளன.
இதில் படுகாயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நாகராஜன் என்பவர்சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமாரன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து இடிந்த விடுதியைப் பார்வையிட்டு மீட்புப்பணிகளை முடுக்கி விட்டனர்.












Click it and Unblock the Notifications