For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி: செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக ஏவியது

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா:

கார்டோ சாட்-1, ஹாம் சாட் ஆகிய இரு செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் பிஎஸ்எல்வி-6 ராக்கெட் வெற்றிகரமான விண்ணில்பாய்ந்தது. ஏவப்பட்ட 18வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டன.

இன்று காலை 10.15 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

முன்னதாக இப் பகுதியில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் உருவான மோசமான காலநிலையால் ராக்கெட் ஏவும் நேரத்தில் சிறிய மாற்றம்செய்யப்பட்டது.

இந்த ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டார். இதைப் பார்வையிடுவதற்காக கலாம் நேற்றேஸ்ரீஹரிகோட்டா வந்துவிட்டார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது ராக்கெட் ஏவும் தளத்தை அவர் நேற்று நாட்டுக்குஅர்ப்பணித்து வைத்த அவர், பின்னர் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ வளாகத்திலேயே தங்கினார்.

இந்த ராக்கெட்டை உருவாக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10.19 மணிக்கு பிஎஸ்எல்வியை பறக்கவிட திட்டமிடப்பட்டு கவுன்ட்-டவுன் நடந்தது. ஆனால், 4 நிமிடங்கள் முன் கூட்டியே10.15 மணிக்கே ராக்கெட் ஏவப்பட்டுவிட்டது. விண்ணில் சுற்றி வரும் பழைய செயற்கைக் கோள் ஒன்றின் சிதறிய பாகங்களோடுமோதாமல் தவிர்ப்பதற்காகவே பிஎஸ்எல்வி முன் கூட்டியே செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுவரை 9 முறை பிஎஸ்எல்வி வெற்றிகரமாக சோதனையிடப்பட்டுவிட்டது.

ஆனால், இரண்டு செயற்கைக் கோள்களுடன் இந்த ராக்கெட் ஏவப்படுவது இதுவே முதல் முறையாகும். அதே போல ஸ்ரீஹரிகோட்டாவில்உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது ராக்கெட் ஏவும் தளத்தில் இருந்து ஏவப்படும் முதல் ராக்கெட்டும் இது தான். ரூ. 400 கோடி செலவில் இந்தராக்கெட் ஏவு தளம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிலும் இதுவரை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை மிக்கது இந்த கார்டோசாட் தான்.

295 டன் எடை கொண்ட பிஎஸ்எல்வி-6 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. தான் ஏந்திச் சென்ற இரு செயற்கைக் கோள்களையும்10.32 மணிக்கு பூமியில் இருந்து 618 கி.மீ. உயரத்தில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தியது.

இந்த செயற்கைக் கோள்கள் அடுத்த சில நாட்களில் சூரிய வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, பூமியை சுற்றி வரச் செய்யப்படும்.

அங்கிருந்தபடியே இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் கால நிலை மற்றும் பிற விஷயங்களை கார்டோ சாட் செயற்கைக் கோள்கண்காணிக்கும். இதன் மூலம் வானிலை முன் அறிவிப்பு, நகர் கட்டமைப்பு, நாட்டின் இயற்கை வளக் கண்காணிப்புக்கு இந்த செயற்கைக்கோள் உதவும்.

உடன் ஏவப்படும் ஹாம்சாட் செயற்கைக் கோள், ஹாம் ரேடியோ ஒலிபரப்புக்கு உதவும்.

ராக்கெட் ஏவப்பட்ட 17 நிமிடத்தில் 618 கி.மீ. உயரத்தை அடைந்தது. அங்கு இரு செயற்கைக் கோள்களும் 30 வினாடி இடைவெளியில்பிஎஸ்எல்வியில் இருந்து பிரிந்து விண்ணில் மிதந்தன. இதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியபடி மகிழ்ச்சியைப்பரிமாறிக் கொண்டனர்.

பிஎஸ்எல்வி ஏவப்படுவதை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி கலாம், செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக ரிலீஸ்செய்யப்பட்டதை இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கவனித்தார். இதையடுத்து விஞ்ஞானிகளை நோக்கி, தனதுவாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் கடைசி 12 மணி நேரம் பிஎஸ்எல்வி, கடும் சூறாவளியையும் பேய் மழையையும்எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X