For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரக்கோணத்தில் கடற்படை ஹெலிகாப்டர் விழுந்து 3 வீரர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

அரக்கோணம்:


அரக்கோணம் அருகே கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் கடற்படை அதிகாரிகள் 3 பேர்உயிழந்தனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படையின் பயிற்சித் தளம் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய கடற்படைத்தளமான இங்கு, இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹெலிகாப்டர் பயிற்சி நிலையம் உள்ளது.

இங்கிருந்து நேற்று மாலை விஜய் ராஜாராம் கார்லே, லெப்டினென்ட் தேபாசிங் போதார் ஆகிய 2 அதிகாரிகளும், நெல்லையைச்சேர்ந்த சப்-லெப்டினென்ட் மனோஜ் பாலகிருஷ்ணன் என்ற வீரரும் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு மணி நேரப் பயிற்சிக்குப் பின்னர் மாலை 5 மணி வாக்கில் தளத்தை நோக்கி ஹெலிகாப்டர் திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது கடற்படைத் தள சுற்றுச் சுவரை ஒட்டி ஹெலிகாப்டர் வந்தபோது கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது. அதில்இருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அதற்குள் 3 பேரும் இறந்து விட்டனர். ஹெலிகாப்டர் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணாகவே இந்த விபத்துஏற்பட்டதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X