• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராவ் வர்றார்ரா...:தெறித்து ஓடும் கரை வேட்டிகள்- காலியாகும் திருமண மண்டபங்கள்

By Staff
|

காஞ்சிபுரம்:

காஞ்சிபுத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பேனர்களை அகற்ற தேர்தல் சிறப்புப் பார்வையாளர்உத்தரவிட்டபோது, அவரைச் சூழ்ந்து கொண்ட அதிமுகவினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை போலீசார் அமைதியாகபார்த்துக் கொண்டிருந்தனர்.

காஞ்சியிலும் கும்மிடிப்பூண்டியிலும் தனது அதிரடியால் திமுக, அதிமுகவினரின் தேர்தல் முறைகேடுகளை நொறுக்கி வருகிறார் ராவ்.

பாமக பேனர் அகற்றம்:

நேற்று ஒரே நாளில் மட்டும் காஞ்சிபுரத்தில் அனுமதியில்லாமல் பிரச்சாரத்துக்காக சுற்றி வந்த 25 வாகனங்களை அவர் பறிமுதல் செய்தார்.இதில் பெரும்பாலானவை திமுகவினரின் வாகனங்கள்.

மேட்டுத் தெருவில் காரில் சென்ற அவர் அங்கு கட்டப்பட்டிருந்த பாமகவினர் அனுமதியில்லாமல் கட்டி வைத்திருந்த பேனர்களைப்பார்த்தார். உடனே போலீசாரை அழைத்து அதை அகற்ற உத்தரவிட்டார்.

ஜெ கட் அவுட் வண்டிக்கு கட்:

பின்னர் அந்தச் சாலையில் அவர் இறங்கி நடந்தபோது, ஜெயலலிதாவின் கட் அவுட், மற்றும் கட்டைகளுடன் ஒரு வேன் போனது. அதைத் தடுத்து நிறுத்தியராவ் அதைக் கைப்பற்ற உத்தரவிட்டார்.

அப்போது அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசின் வாகனம் வந்தது. அந்த வாகத்தையும் நிறுத்திய ராவ், பிரச்சாரம் செய்வதற்குரிய அனுமதிச்சீட்டு உள்ளதா என்று கேட்டார். அந்த சீட்டை மைதிலி காட்டிய பின்னரே வாகனத்தை செல்ல அனுமதித்தார்.

சிக்கிய திமுகவினர்:

பின்னர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அருகே உள்ள தெருவில் சென்ற ராவ், அங்கு திமுக கொடியுடன் வந்த காரை நிறுத்தினார். அந்த காரில்இருந்தவர்களிடம் வாகனத்தை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த அனுமதி உள்ளதா என்று கேட்டார். அனுமதி வாங்கவில்லை என அவர்கள் பதில் தந்தனர்.

இதையடுத்து அந்த காரை அப்படியே போலீஸ் நிலையத்துக் கொண்டு செல்ல காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

தேனம்பாக்கத்தில் திமுகவினர் நட்டிருந்த பேனர்களை அப்படியே பிடுங்கி எறியச் சொன்னார்.

ஓரிகை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதியின்றி கட்டியிருந்த கொடிகளையும் தோரணங்களையும் தானே கழற்றினார் ராவ். இதைப் பார்த்தஅதிகாரிகள் ஓடி வந்து அவற்றைக் கழற்றி அப்புறப்படுத்தினர்.

திரு திரு திருவென முழிக்கிறே...

பின்னர் முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ் ராஜனின் காரை நிறுத்தி, தேர்தல் பணி செய்ய காருக்கு அனுமதி பெறப்பட்டதா என்று கேட்டார். ராஜன் முழி முழிஎன முழித்தார். இதையடுத்து அனுமதி பெறும் வரை கார் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று உத்தரவிட்ட ராவ், போலீஸ்காரர் ஒருவரைஅழைத்து காரை சாலையோரமாக நிறுத்த உத்தரவிட்டார்.

அதே போல திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடியின் பெயர் எழுதப்பட்ட ஒரு கார் வரவே அதையும் நிறுத்திய ராவ், அனுமதி சீட்டைக்கேட்டார். அதிலிருந்த திமுக தொண்டர்கள் பேயறைந்த மாதிரி முழிக்கவே, காரை ஓரம் கட்டிவிட்டு அதிலிருந்தவர்களை இறங்கிப் போகச் சொன்னார்.

பின்னர் ஒரு பள்ளியில் திமுகவினர் கட்டியிருந்த தோரணங்களை அவிழ்த்து எறியச் சொன்ன ராவ், அங்கிருந்த காவலாளியை அழைத்து பள்ளியில் யார் தங்கியிருப்பதுஎன்று கேட்டார்.

திமுகவினர் தங்கியிருப்பதாக அவர் பதில் சொல்லவே, உள்ளே சென்ற ராவ் அங்கிருந்த மோகன் என்பவரிடம் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றுகேட்டார். பொன்முடி தங்களை விழுப்புரத்தில் இருந்து அழைத்து வந்துள்ளதாகவும், ஏராளமான திமுகவினர் வந்துள்ளதால், அவர்களுக்கு சமைத்துப் போடும்வேலையில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் மோகன் கூறினார்.

இதை அப்படியே குறித்துக் கொண்ட ராவ், தேர்தல் நாளில் இவர்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உங்களால் முடியாவிட்டால்...

சில இடங்களில் அதிமுகவினரின் அனுமதியில்லாத தேர்தல் பேனர்களை அகற்ற ராவ் உத்தரவிட்டபோது போலீசார் அதைச் செய்யாமல் நின்றனர்.அதிகாரிகளும் ஷாக் ஆகி நின்றனர்.

அப்போது, உங்களால் இவற்றை அகற்ற முடியாவிட்டால், மத்தியப் படைகளை வரவழைத்து அகற்றுங்கள் என்றார். இதைக் கேடு ஆடிப் போனஅதிகாரிகள் உடனே அவற்றை அப்புறப்படுத்தினர்.

பெண் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்யும் அமைச்சர் தளவாய்

ஜெ கட்-அவுட்., வாக்குவாதம்:

பின்னர் அங்கிருந்து கும்மிடிப்பூண்டிக்குச் சென்றார் ராவ். அங்கு ஜெயலலிதாவின் 60 உயர அங்கார மின் விளக்கு கட்-அவுட் இருந்தது. அனுமதி பெறாத அந்தகட் அவுட்டை அகற்ற ராவ் உத்தரவிட்டபோது, அது தனியார் இடம் சார் என அதிகாரிகள் பதில் தந்தனர்.

அப்படியா, இந்த கட் அவுட் வைக்க போலீஸ் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்டார் ராவ். இல்லை என்று போலீசாரிடம் இருந்து பதில் வந்தது.இதையடுத்து உடனே அந்த கட்-அவுட்டை அங்கிருந்து தூக்குமாறு உத்தரவிட்டார்.

அப்போது அதிமுகவினர் அவரைச் சூழ்ந்து கொண்டு கெரா செய்வது மாதிரி வாக்குவாதம் செய்தனர். அப்போது, யார் தப்பு செய்தாலும் தப்பு தான் என்றுகூறியவாரே மேலே பார்த்தார். அவரது கண்ணில் ரோட்டின் குறுக்கே கட்டப்பட்ட அதிமுக தோரணங்கள் படவே அதையும் கழற்றச் சொல்லிவிட்டுப்போய்க் கொண்டே இருந்தார்.

இதனால் டென்சனான அதிமுகவினர் குரலை உயர்த்தி சவுண்டு விட்டனர். உடனடிருந்த போலீசார் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை:

இந் நிலையில் இதே இடத்தில் பிற தேர்தல் அதிகாரிகளிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம் வாக்குவாதம் செய்த தகவல் அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.அதை போலீசார் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த விவரமும் கூறப்பட்டது.

இதனால் டென்சனான ராவ், அதிகாரிகள் பக்கம் திரும்பி, இந்த தோரணங்களையும் ஜெயலலிதா கட்-அவுட்டையும் அகற்றாவிட்டால் டெல்லியில்சொல்லி கடும் நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் அதிகாரிகளிடம் அமைச்சர்களே வந்து வாக்குவாதம் செய்கிறார்கள். அதை போலீசார் வேடிக்கைபார்க்கிறார்கள். இது போல இன்னொரு முறை நடந்தால், போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்றார்.

இந் நிலையில் அங்கு வந்த தளவாய் சுந்தரம், ராவிடம் ஏதோ சொல்ல வந்தார். அதை காதில் வாங்க ராவ் மறுத்துவிட்டார். இதனால் தளவாய் முகம்தொங்கியபடி அங்கிருந்து நகர்ந்தார்.

காலியாகும் திருமண மண்டபங்கள்:

இந் நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு திருமண மண்டபங்களிலும், வீடு பிடித்தும் தங்க வைக்கப்பட்டுள்ள திமுக, அதிமுக தொண்டர்களைஉடனடியாக இரு தொகுதிகளை விட்டு வெளியேற்ற போலீசாருக்கு ராவ் உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் வேலையோடு அப்படியே கள்ள ஓட்டு போடுவதற்காக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ராவின் உத்தரவையடுத்து திருமண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 8 திருமண மண்டபங்களில் தங்கியிருந்த அதிமுக, திமுக தொண்டர்கள்விரட்டப்பட்டனர்.

இவர்களுக்கு மண்டபத்தை வாடகைக்கு விட்ட மண்டப மேனேஜர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமங்களிலும் சோதனை:

மேலும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு பிடித்து தங்கியுள்ள அதிமுக, திமுகவினரையும் வெளியேற்ற ராவ் உத்தரவிட்டுள்ளார். இதைபோலீசார் செய்யாவிட்டால், மத்தியப் படையை வைத்து தேர்தல் கமிஷன் செய்யும் என்ற எச்சரிக்கையும் விட்டுள்ளார்.

இதையடுத்து மானத்தைக் காத்துக் கொள்ள, இன்று காலை முதல் கிராமம் கிராமமாக போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வெளியாட்களைவெளியேற்றி வருகின்றனர்.

அதே போல சத்திரங்களில் ஆரம்பித்து லாட்ஜ்கள் வரை ஒரு இடம் விடாமல் சோதனையிட்டு கள்ள ஓட்டுக் கும்பலை வெளியேற்றவும் அவர்உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த இடங்களில் சோதனைகளை ஆரம்பித்துள்ள போலீசார், தொகுதி எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, கூட்டமாக வாகனங்களில்தொண்டர்களை அழைத்து வரும் வாகனங்களைத் தடுத்து திருப்பி அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.

வந்து இறங்கிய மூன்றே நாட்களில் உண்மையிலேயே கலக்கி எடுத்துவிட்டார் ஜே.ஜே.ராவ். அவரைப் பார்த்தாலே ராவ் வர்றார்ரா... என்று கரைவேட்டிகள் அலறிக் கொண்டு ஓடுகின்றன. அதே போல இதுவரை ஆளும்கட்சி தொண்டர்களாக இருந்து வந்த போலீசாரும் கலங்கிப் போய், கொஞ்சம்நேர்மையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X