For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் விதிகள்: திமுகவினருக்கு கருணாநிதி அட்வைஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அக் கட்சியினரைகருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஞ்சி, கும்மிடிபூண்டி தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் காட்டி வரும் பாரபட்சமற்ற கண்டிப்பை திமுக வரவேற்ககடமைப்பட்டிருக்கிறது. அதிமுகவினர் இந்த நடவடிக்கைகளைக் கண்டு ஆணைய அதிகாரிகள் மீதே ஆத்திரம் கொண்டிருப்பது நமக்குத்தெரியும்.

அதே நேரத்தில் திமுகவினரும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் தங்களையும் அறியாமல் செய்துவிடும் விதிமீறல்களை தேர்தல்அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அதைப் புரிந்து கொண்டு, உடனே தவறை திருத்திக் கொள்கின்றனர் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

அமைதியான முறையில் தேர்தல் நடக்க ஆணையத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ளநம்பிக்கை கொண்டுள்ளவர்களின் அடையாளமாகும்.

வன்முறை, விதிமீறல் போன்றவற்றின் மூலம் வெற்றியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுவோரை தோற்கடிக்க கூட்டணிக் கட்சியினர்அனைவரும் தேர்தல் விதிமுறைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்குமாறு கேட்டுக் கெள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி-பவார் சந்திப்பு:

இதற்கிடையே சென்னை வந்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில்சந்தித்துப் பேசினார்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் திருமணத்தில் பங்கேற்க அவர் வந்திருந்தார். விமானப் போக்குவரத்துத் துறைஇணையமைச்சரும், தனது கட்சியின் எம்பியுமான பிரபுல் படேலும் வந்த பவார், அண்ணா அறிவாலயம் வந்து கருணாநிதியை சந்தித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர் சரத்பவார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவருக்கு தனது இல்லத்தில் மதியவிருந்து கொடுத்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து டீசல் வாங்க அரசுப் போக்குவரத்துக்கழங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரிலையன்சுக்காக இந்த டீலை கச்சிதமாக முடித்துத் தந்தது பவார் தான் என்று செய்திகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X