குழந்தைகள் கடத்தல்: மலேசிய நிறுவன நிர்வாகி, மனைவி, மகன் கைது
சென்னை:
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக தத்து கொடுக்கும் நிறுவனமான மலேசியன் சோசியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிறுவனர்,அவரது மனைவி, அவர்களது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரின் ஓட்டேரி, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7குழந்தைகளை கடத்திச் சென்ற வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, திருவேற்காடு அருகே உள்ள மாதிரிவேடு பகுதியில் உள்ள மலேசியன் சோசியல்சர்வீஸஸ் சமூக சேவை நிறுவனத்திடம்தான் அந்தக் குழந்தைகளை விற்றதாகக் கூறினர்.
கடத்தப்பட்டு விற்கப்பட்ட 7 குழந்தைகளில் 4 குழந்தைகள் தற்போது வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டு வளர்ந்துவருகின்றன. மற்ற 3 குழந்தைகளும் தமிழகத்திலேயே தத்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீஸார் மலேசியன் சோசியல் சர்வீஸஸ் நிறுவனத்தைஉருவாக்கிய ரவீந்திரநாத், இயக்குனரும், ரவீந்திரநாத்தின் மனைவியுமான வத்சலா, அவர்களது மகன் வழக்கறிஞர்திணேஷ்குமார் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
கைது குறித்து உதவி காவல் ஆணையர் அகஸ்டின் டேனியேல் கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டு இந்த மையம்தொடங்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை ஷெனாய் நகரில் இருந்துள்ளார்கள். பின்னர் மாதிரிவேடுக்கு இடம் மாறியுள்ளனர்.
கடத்தல் கும்பலிடம் ரூ. 10,000 கொடுத்து குழந்தையை வாங்கி விட்டு,அக்குழந்தைகளை ரூ. 45,000க்கு பிறருக்கு தத்து கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் அதை விட அதிக தொகைக்கு அவர்கள்தத்து கொடுத்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
2002ம் ஆண்டுடன் குழந்தைகளை தத்து எடுப்பதை இந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
மொத்தம் 350 குழந்தைகளை தத்து கொடுத்துள்ளனர். இவர்களில் 125குழந்தைகள் வெளிநாடுகளில் தத்துகொடுக்கப்பட்டுள்ளன. பணத்தை வாங்கிக் கொண்டுதான் குழந்தைகளை இந்த நிறுவனம் தத்து கொடுத்துள்ளது.
பணத்திற்காகவே இவர்கள் குழந்தைகளை தத்து கொடுத்திருப்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டு, குழந்தைகள் கடத்தல்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் டேனியேல்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |