திமுக மாநாட்டுப் பந்தலில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டுப் பந்தலில் சிறிய தீவிபத்து ஏற்பட்டதால் தொண்டர்கள் பீதியடைந்தனர்.
ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போது, அவரது மைக் திடீரென செயல்படவில்லை. பின்னர் மைக் சரி செய்யப்பட்டு அவர்மீண்டும் பேசினார். அப்போது மேடையின் முன்புறம் இருந்த அலங்கார விளக்கிலிருந்து திடீரென தீப்பொறிகள் பறக்கத்தொடங்கின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்பொறிகள் அணைக்கப்பட்டன. மின் கசிவு ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டதாகதெரியவந்தது. அது சரி செய்யப்பட்ட பின்னர் ஸ்டாலின் தொடர்ந்து பேசினார்.












Click it and Unblock the Notifications