திமுக மாநாடு: கூட்டம் இல்லை; தலைவர்கள் "மூட் அவுட்" !
கோவை:
கோவையில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டிற்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வராததால் திமுக தலைவர் கருணாநிதிஉள்ளிட்ட தலைவர்கள் மூட் அவுட் ஆகி காணப்பட்டனர்.
மண்டலமாநாடுகளை நடத்தி வரும் திமுக, தற்போது கோவையில் மண்டல மாநாட்டை நடத்தி வருகிறது. சனிக்கிழமை காலைகொடியேற்றத்துடன் தொடங்கிய திமுக மாநாட்டிற்கு தொண்டர் கூட்டம் அதிக அளவில் இல்லை.
இதுகுறித்து மாநாட்டு அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் கருணாநிதி வெளிப்படையாகவேதனது அதிருப்தியைத் தெரிவித்தாராம்.
கருணாநிதியின் அதிருப்தியைப் பார்த்த மாநாட்டு அமைப்பாளர்கள், பல்வேறு வாகனங்களை அனுப்பி "தொண்டர்களை"வரவழைக்க முயற்சிகள் எடுத்தனர். பிற்பகலுக்கு மேல்தான் ஓரளவு கூட்டம் காணப்பட்டது.
கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் 83அடி உயர கொடிக் கம்பம், கோவை நகரின் 83 இடங்களில் வரவேற்புவளைவுகள் என சென்டிமென்டலாக அமைத்துக் கலக்கியிருந்தனர் திமுகவினர். கொடிக் கம்பத்தை கருணாநிதி வெகுவாகரசித்தார்.
தனக்கு அணிவிக்கப்பட கொண்டு வந்திருந்த ஏலக்காய் மாலையை ரசித்த கருணாநிதி அதிலிருந்து ஒரு ஏலக்காயைப் பிய்த்துவாயில் போட்டு மென்றார்.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் ஏற்பாட்டின் பேரில், பி.எஸ்.என்.எல். இரண்டு பூத்களை மாநாட்டுப்பந்தலில் அமைத்திருந்தது. இதில் ஒரு ரூபாய் போட்டு பேசும் வசதியுள்ள போனும், எஸ்.டி.டி போனும் வைக்கப்பட்டிருந்தன.இதுதவிர பி.எஸ்.என்.எல். செல் போனுக்கான ரீ சார்ஜ் கார்டுகளும் ஏராளமான அளவில் வைக்கப்பட்டிருந்தன.
வழக்கம் போல கோவை திமுகவினரும் வைகோவைப் புறக்கணித்தனர். மாநாட்டுக்கு வருகை தரும் கூட்டணிக் கட்சித்தலைவர்களான ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களுக்கு வரவேற்பு அளித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.ஆனால் இதில் வைகோவின் படம் மட்டும் இடம் பெறவில்லை.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |