நுழைவுத் தேர்வு ரத்தாகும் வரை போராடுவோம்: ராமதாஸ்
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரை போராடப் போவதாக பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வகையில் அவசரச் சட்டத்தைப் பிறக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில்டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தொண்டர்கள் மற்றும் பாமக மாணவர்சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் ராமதாஸ் ஆர்ப்பாட்டம் செய்தார். பாமக தொண்டர்களும், மாணவர்களும் கண்களில்கருப்புத் துணி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடியிருந்த பாமகவினரிடையே ராமதாஸ் பேசுகையில், நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய அரசாணை பிறப்பித்ததுதவறு. அதற்குப் பதிலாக அவசரச் சட்டம் பிறப்பித்திருக்க வேண்டும். இப்போதும் கூட காலதாமதமாகி விடவில்லை.
உடனடியாக சட்டசபையைக் கூட்டி இதுதொடர்பான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வினால்பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்த சரியான பட்டியலை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை.
மேலும், தமிழக அரசு வழக்கறிஞரும் சரியாக வாதாடவில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்தே தீர வேண்டும். அதுவரைநாங்கள் போராடப் போகிறோம் என்றார் ராமதாஸ்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |