அத்வானி நாளை அயோத்தி பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாஜக தலைவர் அத்வானி நாளை அயோத்தியா செல்கிறார். இந்த தகவலை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.
அயோத்தி ராமஜென்ம பூமி வளாகத்தில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இவர்கள் அனைவரும்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த அயோத்தியா பகுதிக்கு நேற்று (புதன்கிழமை) செல்லப்போவதாக அத்வானி முதலில் தெரிவித்தார். பிறகுகட்சியின் மூத்த தலைவர்களை அனுப்பி அவர்களிடம் விவரங்களை கேட்ட பிறகு அயோத்தியா செல்லவிருப்பதாக கூறினார்.
இந் நிலையில் அத்வானி நாளை அயோத்தியா செல்லவிருக்கிறார் என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுஷ்மா ஸ்வராஜ்டெல்லியில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications