For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் மினி பஸ்களை இயக்கத் தடை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிற்றுந்து எனப்படும் மினி பேருந்துகளை சென்னை நகரில் இயக்குவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் (சென்னை நீங்கலாக) மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.மக்களிடையே நல்ல வரவேற்பை இந்த பேருந்துகள் பெற்றன. இருப்பினும் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில்மட்டும் மினி பேருந்துகளை திமுக ஆட்சி அறிமுகப்படுத்தவில்லை.

சென்னை மாநகரப் போக்குரவத்துக் கழக ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால்அவர்களின் கோரிக்கை காரணமாக சென்னை நகரில் மினி பேருந்துகளை திமுக அரசு அறிமுகப்படுத்தவில்லை.

இந் நிலையில் சென்னைப் புறநகரான திருவான்மியூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க முதல்வர்ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து மாநில போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.அதில், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தத் திட்டத்தை சென்னை நகரிலும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னைப்புறநகர்ப் பகுதிகளில் 500 மினி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை நகரில் பேருந்து போக்குவரத்து ஏற்கனவே தேசியமயமாக்கப்பட்ட வழித்தடமாக இருந்து வருகிறது. சென்னைநகரில் தற்போது 2700 அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஆனால் இவற்றை 5000 ஆக உயர்த்த வேண்டும் என்றுநாங்கள் கோரி வருகிறோம்.

இந் நிலையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் வேலைஇழக்கும் அபாயம் ஏற்படும். அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும். மாணவ, மாணவியர் அனுபவித்துவரும் இலவச பஸ் பாஸ் முறை பாதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.டி.தினகரன் புதன்கிழமை விசாரித்தார். அப்போது, மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் அரசு முடிவெடுக்கக் கூடாது.

இதே பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பு நிலுவையில் உள்ள வழக்கோடு இதையும்சேர்த்து விசாரிக்க உத்தரவிடுவதாக நீதிபதி அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X