For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடந்தை கோரம்: இன்று முதலாமாண்டு நினைவு தினம்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணம் பள்ளிக் கூட தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக இறந்ததன் முதலாண்டு நினைவு தினம் இன்றுஅனுசரிக்கப்படுகிறது.

2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி. கும்பகோணம் மட்டுமல்ல, உலகம் முழுவதையும் உலுக்கிய சோக தினம். காலையில்வழக்கம் போல பள்ளிக்குப் பறந்து சென்ற சின்னச் சிட்டுக்கள், பிற்பகலில் பிணங்களாக, கரிக் கட்டைகளாக வீடுதிரும்பியபோது அந்தப் பிஞ்சுக்களைப் பெற்றவர்கள் நெஞ்சு பட்ட பாடு இருக்கிறதே, இன்னும் கூட நெஞ்சை உலுக்கும் அந்தஅகோர நிமிடங்கள்!காசிநாதன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறையிலிருந்து கிளம்பிய தீ, மேல் மாடிக்குப்பரவி, அங்கே சிறை அறை போன்ற வகுப்பறைக்குள் பூட்டிக் கிடந்த பிஞ்சுக் குழந்தைகள் மீது இரக்கமில்லாமல் கோரதாண்டவம் ஆடி 94 குழந்தைகளை விழுங்கிய பின்தான் ஓய்ந்தது.

ஏராளமான குழந்தைகளுக்கு தீக்காயம். கால் வெந்து, கை வெந்து, முகம் சிதைந்து, அன்றோடு பொசுங்கிப் போனதுஅவர்களது ஆசைக் கனவுகள்.

கும்பகோணம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் மட்டும் 13 குழந்தைகள் பரிதாபமாக இறந்து போயின. இன்றுஅக்குழந்தைகளுக்கு நத்தம் மக்களே ஒன்று சேர்ந்து நினைவிடம் அமைத்துள்ளனர். கோவில் போல அது பாவிக்கப்பட்டுதினசரி அங்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனியாக சமாதி கட்டப்பட்டுள்ளது.

நத்தம் கிராமத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தத்தெடுத்துக் கொண்டது. இதன் காரணமாக நத்தம் கிராமத்திலேயே புதிதாக ஒருஆரம்பப் பள்ளிக் கூடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. குழந்தைகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தனையும் செய்து கொடுத்தும், குழந்தைகளை இழந்த சோகம் இன்னும் அவர்களின் மனதிலிருந்து அகலவில்லை.

இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. கும்பகோணம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தஞ்சைமாவட்டம் முழுவதுமே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் கண்ணீர் அஞ்சலிகள்.

ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடம் முன்பு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் கூடியிருந்து கண்ணீர் உகுத்து வாடிப் போன தங்களதுஅன்பு மலர்களை நினைத்து சோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இரங்கல் கூட்டங்களும், பேரணிகளும் நடந்து வருகின்றன.மலர் வளையங்களும், கண்ணீர் மாலைகளும், அகாலமாக மறைந்து போன அந்த பிஞ்சுக்களின் ஆத்மாவைசாந்திக்குள்ளாக்கட்டும்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X