For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெவின் அடுத்த பல்டி: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு- எஸ்மா வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப் படி உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப் படிஉயர்வை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஊதிய உயர்வு 1.7.2005 தல் அமலுக்கு வரும் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல அரசு ஊழியர்களுக்கு எதிரான எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டத்தையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வாபஸ் பெற்ற எல்லா சலுகைகளையும் திரும்பத் தந்து கொண்டிருக்கும்ஜெயலலிதாவின் பல்டிகளில் முக்கிய பல்டியாக இது கருதப்படுகிறது.

இந்த டெஸ்மாவை வைத்துத் தான் அரசு ஊழியர்களை லட்சக்கணக்கில் கூண்டோடு வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீடு புகுந்து கைது செய்ய வைத்தார். அவர்களை பல வகையிலும் வாட்டி எடுத்த ஜெயலலிதாஇப்போது ஊதிய உயர்வை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம் சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர். அரசு ஊழியர்களின் கடமை மக்களுக்கு சேவை செய்வதுதான் என்பதை உணர்த்த எஸ்மா சட்டத்தைஎனது அரசு கொண்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையிலான நட்புறவில்புதிய அத்தியாயம் ஏற்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மீது எந்தவித மனக் கசப்பும் அரசுக்குக் கிடையாது. இதன்பேரில்தான், நீதிபதிகள் குழு பரிந்துரையின் பேரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்குபொது மன்னிப்பை எனது அரசு வழங்கியது.

இதன் மூலம் அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு உணர்வு முழுமையாகஉருவாக்கப்பட்டது. இனி எந்தவித தடுமாற்றத்திற்கும் ஆளாகாமல் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசுஊழியர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக எஸ்மா சட்டம் வருகிற 23ம் தேதியுடன் காலாவதியான பிறகு, புதிய அறிவிக்கை வெளியிடப்படாது.(அதாவது நீட்டிக்கப்படாது)

வேலை நிறுத்தம் செய்து தண்டனைக்குள்ளான 1,63,533 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2003ம் ஆண்டு ஜூலை 5ம்தேதி முதல் 25ம் தேதி வரையில் பணிக்கு வராத காலத்தை பனிக் காலமாக கருத ஏற்கனவே அரசு உத்தரவிட்டது.

அதேபோல, நீதிபதிகள் குழுவால் தண்டனை பரிந்துரைக்கப்பட்ட 1,003 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள்பரிசீலிக்கப்பட்டு, 2003ம் ஆண்டு ஜூலை 25 முதல் 2004 பிப்ரவரி 10ம் தேதி வரையிலான காலம் பனிக் காலமாக கருதஉத்தரவிட்டுள்ளேன்.

அரசின் நிதி நிலை சீரடைந்த பின்னர் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என ஏற்கனவேஅறிவித்திருந்தேன். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 3 சதவீத அக விலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் அரசு ஊழியர் அகவிலைப்படி 64 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக உயருகிறது.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், குழந்கைள் நலஅமைப்பாளர்கள், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கவுன்சில் ஊதியம் பெறுவோர் உள்ளிட்டோருக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.

ஓய்வூதியதாரர்களுக்கும் இந்தப் பலன் கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு ரொக்கமாக வழங்கப்படும்.

மேலும் தொகுப்பூதியம் பெறுவோர், மாதம் ரூ. 150க்கு அதிகமாக பெறுவோருக்கு மாதம் ரூ. 20ம், குறைவாகப்பெறுவோர்களுக்கு ரூ. 10ம் கூடுதலாக வழங்கப்படும்.

இந்த உயர்வு மூலம் 12.33 லட்சம் அரசுப் பணியாளர்கள், 4.37 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவர். இதனால் அரசுக்குஆண்டுதோறும் ரூ. 201.23 கோடி கூடுதல் செலவாகும்.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மக்களுக்கு சிறப்பான சேவை செய்யவே இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதைஉணர்ந்து, தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எனது சீரிய எண்ணத்தை வெற்றிகரமாக்கும்நோக்கத்துடன் என்னுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அரசு ஊழியர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலலிதா.

தேர்தல் நெருங்கும்போது அரசு ஊழியர்களுக்கு இன்னொரு மாபெரும் சலுகையையும் ஜெயலலிதா அறிவிப்பார் என்றுதெரிகிறது. அதாவது, அவர்களது ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக ஜெயலலிதா உயர்த்தவுள்ளார் என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X