ஆசிரியை மீனாட்சி மாயம்: அதிமுக எம்எல்ஏவிடம் லை-டிடெக்டர் சோதனை
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் அதிமுக எம்.எல்.ஏவும் மாஜி மந்திரியுமான பாப்பா சுந்தரத்திடம்லை-டிடெக்டர் (உண்மை கண்டறியும் கருவி மூலம்) சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் மீது சந்தேகம் தெரிவித்த மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கத்தை போலீசார் உலுக்கி எடுத்தனர். அவருக்கு பலவகைகளிலும் டார்ச்சர் தந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்திடம் இருந்து தொடர்ந்து குட்டு வாங்கி வருகிறது தமிழககாவல்துறை.
இப்போது இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், அவரது சகோதரர் பசுபதி, ஆசிரியர் சிவக்குமார், பாப்பாசுந்தரத்தின் மகன் கருணாகரன், உறவினர் ரங்கநாதன் ஆகியோரிடம் லை-டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த லை-டிடெக்டர் கருவி பெங்களூரில் தான் உள்ளது. இதனால் அங்கு வைத்து தான் இவர்களிடம் சோதனைநடத்தப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு மதுரை உயர்நீதிம்ன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக எம்.எல்.ஏ.பாப்பா சுந்தரத்திடம் ஏன் லை-டிடெக்டர் சோதனை நடத்தவில்லை என்று போலீஸாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
பாப்பாவை காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்து வரும் காக்கிகள், இந்தக் கண்டனத்தையடுத்து அவரிடமும் லை-டிடெக்டர்சோதனையை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாப்பா சுந்தரம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.
இதற்காக சிபிசிஐடி போலீஸார் முன் ஆஜராகுமாறு எம்.எல்.ஏவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாப்பா சுந்தரம் தப்பே செய்யவில்லை, அவருக்கும் மீனாட்சி காணாமல் போனதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என முதல்வர்ஜெயலலிதா கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications