For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொதுமன்னிப்பு கேட்கும் ரெளடி பங்க் குமார்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் ஒரு காலத்தில் பெரிய ரெளடியாக திகழ்ந்த, இப்போது பாமக தொண்டரணித் தலைவராக இருக்கும் பங்க் குமார்தனக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் நடராஜிடம் மனு கொடுத்துள்ளார்.

சென்னையின் பிரபல ரெளடிகளில் ஒருவர் பங்க் குமார். இவர் மீது ஏகப்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில்பலவற்றில் குமார் விடுதலையாகி விட்டார். இன்னும் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவற்றில் அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். பங்க் குமார் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் அணித்தலைவராக இருக்கிறார். பாமக கொடி கட்டிய காரில் தனது வழக்கறிஞர் துரைப்பாண்டியனுடன் மாநகர காவல் ஆணையர்அலுவலகத்திற்குக் குமார் வந்தார்.

ஆணையரிடம் மனு கொடுக்க விரும்புவதாக தெரிவித்து பொதுமக்களுடன் அமர்ந்திருந்தார். ஆனால் பங்க் குமாரை சந்திக்கமுடியாது என்று ஆணையர் நடராஜ் கூறி விட்டதால், அவரது வழக்கறிஞர் துரைப்பாண்டியன் மட்டும் சென்று நடராஜைசந்தித்துப் பேசினார்.

பின்னர் பொது மன்னிப்பு கோரும் பங்க் குமாரின் மனுவை நடராஜிடம் கொடுத்தார். பங்க் குமார் கொடுத்துள்ள மனுவில்,சைதாப்பேட்டை கொத்தவால் சாவடி பகுதியில் நான் வசித்து வருகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சமீபத்தில் விடுதலை ஆனேன். தற்போது சென்னைசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினசரி நிபந்தனை கையெழுத்துப் போட்டு வருகிறேன். தற்போது எந்தப் பிரச்சினைகளுக்கும்நான் போவதில்லை.

சமூகத்தில் மற்றவர்களைப் போல நானும் சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன். நல்ல முறையில் குடும்பத்தோடுஅமைதியாக வாழ விரும்புகிறேன். ஆனால் காவல் துறையினர் என்னை அமைதியான முறையில் வாழ விடாமல்தடுக்கிறார்கள்.

சென்னையில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் என் மீதே வழக்கு போடுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் என்னை மிகவும்சிரமப்படுத்துகிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

சமீபத்தில் தினத்தந்தி பத்திரிக்கையில் தங்களைப் பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது. அதில் ஆணையர் அலுவலக வளாகத்தில்மின் கம்பத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இரண்டு காகங்களை நீங்கள் காப்பாற்றியதாக செய்தி வந்திருந்தது.

ஒரு பறவையின் உயிருக்கே இவ்வளவு முக்கியத்துவம் தரும் தாங்கள் எனக்கு கருணையின் உருவமாக திகழ்கிறீர்கள்.எனவே பரந்த மனப்பான்மையுடன் நிச்சயமாக உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பங்க் குமாருக்கும், அவரது எதிர்கோஷ்டியினருக்கும் இடையே நடந்த பல்வேறு மோதல்களில் மொத்தம் 18 பேர் வரைகொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பங்க் குமாரின் மனு குறித்து ஆணையர் நடராஜிடம் கேட்டபோது, மனுகொடுத்தார்கள், பெற்றுக் கொண்டேன்.

இதுகுறித்து வேறு எதுவும் இப்போதைக்குக் கூற முடியாது என்றார். அயோத்தியா குப்பம் வீரமணி, வெள்ளை ரவி உள்ளிட்டபல்வேறு ரெளடிகள் இதற்கு முன்பு சென்னை போலீஸ் ஆணையரிடம் பொது மன்னிப்பு கேட்டுள்ளனர். இவர்களில் தாதாவீரமணியை, போலீஸார் என்கவுண்டர் மூலம் போட்டுத் தள்ளியது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X