For Daily Alerts
ரூ. 9,990க்கு கம்ப்யூட்டர்: தயாநிதி மாறன்
சென்னை:
ரூ. 9990 கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கும் முறை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் திங்கள்கிழமை முதல்அமலுக்கு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9990 கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கும் முறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்குவருகிறது. தனியார் நிறுவனம் ஒன்று இந்த விலைக்கு கம்ப்யூட்டர்களை சென்னையில் விற்பனைக்கு விடுகிறது.
இதையடுத்து அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இன்டர்நெட் இணைப்புகளுக்கான கட்டணம் ஆகஸ்ட் முதல்வாரத்தில் வெகுவாக குறைக்கப்படவுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் ஒரே கட்டணத்தில் தொலைபேசியில் பேசும்வசதியையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |