For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக, கர்நாடக அணை ஆய்வு: மத்திய குழு திருப்தி

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

தமிழகத்தின் மேட்டூர் மற்றும் கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் கடந்த ஆண்டை விட இந்தஆண்டு திருப்திகரமான வகையில் நீர் இருப்பு உள்ளதாக இரு மாநில அணைகளையும் பார்வையிட்ட மத்திய குழுதெரிவித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவுப்படி, கர்நாடகம் மற்றும் மேட்டூர் அணைகளைப் பார்வையிட மத்திய நீர் ஆணையஉறுப்பினர் பி.எஸ்.அகுஜா, நீர்வளத்துறை ஆணையர் ஏ.டி.பரத்வாஜ், வேளாண்துறை பிரதிநிதி ஷான் ஷெர் சிங் ஆகியோர்கொண்ட குழு கர்நாடகம் வந்தது.

அங்கு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளை நேரில் பார்வையிட்டு நீர் இருப்பு நிலவரத்தை ஆராய்ந்தது. பின்னர்மத்திய குழுவினர் சனிக்கிழமை மேட்டூர் சென்றனர். மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறித்த தகவல்களை தமிழக அதிகாரிகள்அவர்களுக்குக் கொடுத்தனர்.

பின்னர் பி.எஸ்.அகுஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இயற்கையே மழை வடிவில் போதிய நீரை இரு மாநிலங்களுக்கும்கொடுத்துக் கொண்டுள்ளது. எனவே கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டதா, இல்லையா என்றகேள்வியே தேவையில்லை.கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பினால் அவர்கள் திறந்து விட்டுத் தான் ஆக வேண்டும்.

இரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல முறையில் நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணராஜசாகர்அணைக்கு அபரிமிதமான நீர் வரத்து உள்ளது. அணையில் 115 அடி நீர் உள்ளது.

மொத்த கொள்ளளவு 124 அடியாகும். இன்னும் சில நாட்களில் கிருஷ்ணராஜசாகர் நிரம்பி விடும். அதன் பிறகு உபரி நீர்தமிழகத்திற்குக் கிடைக்கும்.

மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் வெறும் 8173 கன அடி நீரே கர்நாடகத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.தற்போது விநாடிக்கு 36,390 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் 34.74 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. இந்த ஆண்டு 44.464 டிஎம்சி நீர் அணையில் உள்ளது.

இரு மாநில அதிகாரிகளும் எங்களுக்குக் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில் இரு மாநில அணைகளிலும்போதிய நீர் இருப்பு உள்ளது என்றார் அகுஜா.

அகுஜா கூறியதை வைத்துப் பார்க்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு மத்திய அரசுஉத்தரவிடாது என்றே தோன்றுகிறது. அப்படியே கூறினாலும் தமிழகத்தின் கோரிக்கைப்படி, நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடுமாறு மத்திய அரசு தெரிவிக்குமா என்பதும் சந்தேகம் தான்.

இரு மாநில அணைகளிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நீர் இருப்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்என்ற நிலையில் இதை கண்டுபிடித்துச் சொல்வதற்காகவா மத்திய நிபுணர் குழு டெல்லியிலிருந்து வந்தது என்ற கேள்விகாவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்போதைய முக்கியப் பிரச்சினை, நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை மதித்து கர்நாடகம் உரிய நீரைத் திறந்து விடவேண்டும் என்பது தான். ஆனால் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்காமல் இருப்பது விவசாயிகளிடையேஅதிருப்தியை அதிகரிக்கவே செய்யும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X