For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பெண் டாக்டருக்கு மகசேசே விருது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Dr. Santha

சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் சாந்தாவிற்கு, பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருதுகிடைத்துள்ளது.

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் கழக மருத்துவமனையை நிறுவியவர் டாக்டர் சாந்தா. கடந்த 50 ஆண்டு காலமாகபுற்றுநோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர். புற்றுநோய் ஒழிப்பில் டாக்டர் சாந்தாவின் அயராத உழைப்பு மற்றும் பொதுச் சேவைகாரணமாக அவருக்கு மகசேசே விருது கிடைத்துள்ளது.

கர்நாடக சங்கீத மேதை பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு மகசேசேவிருது கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

விருது குறித்து டாக்டர் சாந்தா கூறுகையில், இது எனக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல. அடையார் புற்றுநோய்க் கழகத்திற்குக்கிடைத்த விருது. எங்களது நிறுவனத்திற்கும், எங்களது பணிக்கும் கிடைத்துள்ள சர்வதேச அளவிலான அங்கீகாரமாக இதைக்கருதுகிறோம்.

1954ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி 12 படுக்கைகளுடன் அடையாறு புற்றுநோய் கழகம் தொடங்கப்பட்டது. இன்று 428படுக்கை வசதிகள், நவீன வசதிகள், சிகிச்சை முறைகளுடன் மிகப் பெரிய மருத்துவமனையாக இது உருவெடுத்துள்ளது.பல்வேறு துறைகளில் ஆய்வு வசதிகளும் இங்கு உள்ளன.

தொடக்கத்தில் இருந்த அதே வேகம், அதே ஈடுபாடு இப்போதும் எங்களது மருத்துவமனையில் உள்ளது பெருமை தருகிறது.பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் இந்த அளவுக்கு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. புற்றுநோய்க் கழகத்தின் வளர்ச்சிக்குஇந்த விருது பயன்படும்.

ஆரம்பத்தில் புற்றுநோய் அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் இருந்தது. 1954ல் எங்களதுமருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டாலும் கூட 1982ம் ஆண்டு வாக்கில் தான் இந்த மருத்துவமனை குறித்தும், புற்றுநோய் குறித்தவிழிப்புணர்வும் மக்களிடையே அதிகம் ஏற்பட்டது.

எங்களது மருத்துவனையில் நவீன உபகரணங்களைப் பொருத்துவதிலும், நவீன சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதிலும்நிதி ஒரு தடையாக இருக்கிறது. இருப்பினும் ஏராளமானோர் எங்களது முயற்சிகளுக்கு பெரிய அளவில் உதவி வருவதால்அந்தத் தடையை மீறி நாங்கள் சேவை செய்ய முடிகிறது.

எங்களது மருத்துவமனையில் 50 சதவீதம் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த சேவையை மேலும்விரிவுபடுத்த நாங்கள் விருப்பமாக உள்ளோம்.

எங்களது நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும், அதன் முடிவுகளும் ஏராளமான நோயாளிகளைசென்றடைய வேண்டும் என்பதே எங்களது லட்சியம் என்றார் டாக்டர் சாந்தா.

1927 ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி சென்னையில் பிறந்த டாக்டர் சாந்தா, புற்றுநோய் ஒழிப்பில் தீவிரமாக பாடுபட்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த இசையமைப்பாளர் மகேஷின் நினைவாக நடிகர் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட பலர்இணைந்து அடையார் புற்றுநோய் கழகத்திற்காக நிதி சேகரிக்கும் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த ஒருவர் மகசேசே விருது பெறுவது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு டாக்டர்எம்.எஸ்.சுவாமிநாதன், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி (மதுரையில் பிறந்தவர் என்றாலும் 16 வயதிலேயே சென்னையில்குடியேறியவர்) ஆகியோர் இந்த பெருமைக்குரிய விருதைப் பெற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X