டிஸ்கவரியில் கோளாறு: வீரர்கள் இன்று விண்வெளியில் நடக்கின்றனர்
ஹூஸ்டன்:
டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக இன்று மூன்றாவது முறையாக விண்வெளியில் நடக்கஉள்ளனர்.
டிஸ்கவரி விண்வெளி ஓடம் கடந்த வாரம் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது, அதிலிருந்து இரண்டு பாகங்கள் கழன்றுவிழுந்தன. டிஸ்கவரியின் இரண்டு வெப்ப பாதுகாப்புத் தகடுகளை அவை சேதப்படுத்தியுள்ளன. இதனால், டிஸ்கவரி பூமிக்குதிரும்பும் போது வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளது.டிஸ்கவரியில் சென்ற ஏழு வீரர்களில் ஸ்டீவ் ராபின்சன், சோய்ச்சி நொகுச்சி ஆகியோர் சேதமடைந்த வெப்ப பாதுகாப்புத்தகடுகளை இன்று பழுது பார்க்க உள்ளனர். ஏற்கனவே விண்வெளியில் இரண்டு முறை அவர்கள் நடந்துள்ளனர்.
சேதமடைந்த வெப்பத் தகடுகளை பழுது பார்ப்பதற்காக 3வது முறையாக, இன்றும் அவர்கள் நடக்கவுள்ளனர்.
விண்வெளி ஓடத்தில் ஏற்படும் சேதத்தை, விண்வெளியிலேயே சீர் செய்ய முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும். இதில் வெற்றிஏற்படுமா என்பதை உறுதியாக கூறமுடியாது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் புஷ் நேற்று விண்வெளி வீரர்களுடன் தொலைபேசியில் பேசினார். டிஸ்கவரி ஓடத்தின்வெற்றிகரமான பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைவரும் பத்திரமாக திரும்பும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications