For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் விமான பயிற்சி பல்கலைக்கழகம்: பிரதமரிடம் ஜெ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரையில் விமானப் பயிற்சி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர்ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்: சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்திபல ஊர்களுக்கு தங்களது சேவையை விரிவுபடுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகஅதிகரித்துள்ளது.

இந்த அபரிதமான வளர்ச்சியின் காரணமாக தனியார் மற்றும் பொதுத்துறை விமான நிறுவனங்கள் அதிகளவில் விமானங்களைவெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ளன. மேலும் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களைசர்வதேச தரத்திற்கு உயர்த்த மத்திய அரசு ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்த கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் வளர்ச்சியால் நூற்றுக்கணக்கானவர் வேலை வாய்ப்பைபெறுவர். ஆகவே விமான நிலைய மேலாளர்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், தகவல் தொடர்புபொறியாளர்கள்,

விமான நிலைய பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு பயிற்சியளிக்க ஒரு கல்வி நிலையம்அவசியம். தற்போது ரேபரேலியில் இதற்கு ஒரேயொரு கல்வி நிலையம் தான் உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவர் அருணாச்சலம், அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலரை சந்தித்துபேசினார். அப்போது அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அத்தாரிட்டியின் உதவியுடன் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகம்துவங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

மதுரையில் விமானப் பயிற்சி பல்கலைக்கழக்தை அமைக்கலாம் என்று துணைத்தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் விமானப் பயிற்சி பல்கலைக்கழகத்தை அமைக்க மதுரை தான் சிறந்த இடம்.

எனவே மதுரையில் இதை அமைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X