For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்த்திக்கின் சரணாலயம் விழாவில் ரசிகர்கள் பயங்கர ரகளை, போலீஸ் தடியடி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Karthik
கூட்டத்தில் பேசும் கார்த்திக்


நடிகர் கார்த்திக் தொடங்கியுள்ள சரணாலயம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடந்த விழாவில் ரசிகர்கள் மேடையில் ஏறமுயன்று அதனால் ரகளை ஏற்பட்டது. ரசிகர்கள் கல்வீச்சிலும், சேர் வீச்சிலும் இறங்கியதால் அப் பகுதியே வன்முறைக் களமானது.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் தனது பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு காரில்ஏறித் தப்பினார் கார்த்திக்.

தான் சார்ந்த தேவர் சமூகத்தினரின் சமூக நலத்திற்காக சரணாலயம் அமைப்பைத் தொடங்கியுள்ளார் கார்த்திக். இந்த அமைப்பைஅரசியல் கட்சியாக்க திட்டமிட்டுள்ளார்.

இந் நிலையில் மதுரை வந்த கார்த்திக், சரணாலயம் அமைப்பின் சார்பில் தனது ஜாதியை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள்வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

விழா நடந்த தமுக்கம் மைதானத்திற்கு வெளியிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள்முக்குலத்தோர் சமூகத்தினர் ஆவர்.

தமுக்கம் மைதானத்திலும், வெளியேயும் கடல் போல திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்ததும் நடிகர் கார்த்திக் முகத்தில்சந்தோஷம் வெடித்தது.

விழாவின் முதல் நகழ்ச்சியாக பட்டிமன்றம் நடந்தது. தேவரின் நிலைத்த புகழுக்குக் காரணம் தேசியமா, தெய்வீகமா என்றதலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இது முடிந்தவுடன் கார்த்திக் மேடைக்கு வந்து பேசத் தொடங்கினார்.

கார்த்திக்கைப் பார்த்தவுடன் ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டு அவரைக் காண மேடையை நோக்கி முண்டியடித்தனர்.இதனால் அங்கு அமளி ஏற்பட்டது. போலீஸாரும், ரசிகர்களை மேடையில் ஏற விடாமல் தடுத்துப் பார்த்தனர். ஆனால் ரசிகர்கள்அடங்கிய பாடில்லை.

இந் நிலையில், மேடையில் ஏராளமான ரசிகர்கள் ஏறத் தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார்லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி பாதியிலேயேநிறுத்தப்பட்டது.

கார்த்திக் தனது பேச்சை சுருக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

Crowd gathered in Karthiks Madurai meeting
திரண்டிருந்த கூட்டம்


ஏற்கனவே ராஜபாளையத்தில் நடந்த விழாவும் இதேபோல ரசிகர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால் விழா பாதியிலேயேநிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம். இந்தக் குழப்பங்களுக்கு வேறு யாரும் காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம்கார்த்திக்கின் சரணாலயம் நிர்வாகிகளுக்கிடையே வலுத்துள்ளது.

முன்னதாக விழாவில் கார்த்திக் பேசுகையில், அற்புதம் என்ற வார்த்தைக்கு இன்றுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது. கடல் போலதிரண்டுள்ள உங்களைப் பார்த்ததும், என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பும், பாசமும் வெகு அற்புதம் என்பதைத் தெரிந்துகொண்டன்ே.

நான் நிறைய விஷயங்களை உங்களுடன் பேச விரும்புகிறேன். எனவே அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்குப் பிரச்சினை வராமல் ரசிகர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நல்லவர்கள் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.நீங்கள் என் மீது காட்டும் அக்கறையை விட நான் உங்கள் மீது அதிக அக்கறை வைத்துள்ளேன்.

மீனாட்சி அம்மன் கோவில் உள்ள இந்தப் புண்ணிய பூமியில் எனக்கு பேசக் கிடைத்த வாய்ப்பை நான் வாழ்நாள் முழுவதும்மறக்க மாட்டேன். மதுரையில் எனக்கு பிரமாண்ட வரவேற்பை ரசிகர்கள் அளித்துள்ளனர். இது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

சரணாலயம் இயக்கம் அரசியல் அமைப்பா அல்லது பொது நல இயக்கமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அதைதெளிவுபடுத்த வேண்டியது எனது கடமை. முக்குலத்து சிங்கங்களில் நானும் ஒரு சிங்கம்.

இந்தச் சமூகம், வீரம், விவேகம், நியாயம், தர்மத்துக்குக் கட்டுப்பட்டதாகும். வீரம் விளைந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள்முக்குலத்தோர்.

இங்கே ஜோதி கொண்டு வரப்பட்டது. புயல் அடித்தாலும், அது அணையாது. அதேபோலத்தான் சரணாலயம் இயக்கமும் என்றுகார்த்திக் பேசியபோதுதான் ரகளை ஆரம்பித்தது. சிலர் கல்வீச்சில் இறங்க, பதிலுக்கு சிலர் மணலை வாரி இறைத்தனர்.

இதைத் தொடர்ந்து செருப்புகளும் பறந்தன. பலரும் மேடையில் ஏறி அங்கிருந்த சேர்களை கூட்டத்தினர் மீது வீசினர்.

இதனால் பேச்சை நிறுத்தி விட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறி கார்த்திக் தப்பினார்.

இந்த விழா குறித்து சரணாலயம் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், சரணாலயம் அமைப்பை அரசியல் கட்சியாகமாற்ற கார்த்திக் முடிவு செய்து விட்டார். கட்சியின் பெயர், கொடியைக் கூட அவர் இறுதி செய்து விட்டார். அதுகுறித்து மதுரைகூட்டத்தில் அறிவிக்கலாம் என்றுதான் அவர் நினைத்திருந்தார்.

Chaos in the Madurai meeting
மேடையில் அடிதடி


ஆனால் அதற்குள் ரசிகர்கள் ரகளையால் விழா பாதியிலேயே முடிந்து போய் விட்டது என்றார்.

கார்த்திக்குக்கு முக்குலக்தோர் சமூகத்தினர் இடையே ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளதால் தான் அவரை அதிமுகவில் சேர்ந்தமுதல்வர் ஜெயலலிதா தயங்குவதாகத் தெரிகிறது. தாமு, குண்டு கல்யாணம், ராதாரவி போன்றவர்களைப் போல் இல்லாமல்கார்த்திக்குக்கு தனிப்பட்ட வகையில் செல்வாக்கு உள்ளதை அவரது மதுரைக் கூட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது.

எம்ஜிஆர் வளைத்து வைத்த முக்குலத்தோரின் வாக்குகளை வைத்துத் தான் அதிமுக இன்று வரை தாக்குப்பிடித்து வருகிறது.இந்த வாக்குகள் சிதையாமல் அப்படியே அதிமுகவுக்குக் கிடைத்து வருவதில் சசிகலாவின் பேருதவியும் உண்டு.

இந் நிலையில் முக்குலத்தோர் சமூகத்தினரிடம் ஆதரவு பெற்ற கார்த்திக்கை கட்சியில் சேர்த்தால் அது சசி அண்ட் கோவுடன்சேர்த்து தனக்கும் உலை வைக்கும் என அதிமுக தலைமை அஞ்சுவதாகத் தெரிகிறது.

இதனால் தான் கட்சியில் சேர வந்த கார்த்திக்கை திருப்பி அனுப்பி வைத்துவிட்டது அதிமுக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X