• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தை மாதிரி மாநிலமாக்குவேன்: கருணாநிதி

By Staff
|

வேலூர்:

வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த திமுக மிகப் பிரமாண்டமான மண்டல மாநாடுஞாயிற்றுக்கிழமை இரவு முடிவடைந்தது.

மாலையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்தா.பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.

இறுதியில் கருணாநிதி நிறைவுரையாற்றினார்.

அவர் கூறுகையில், தன்னுடைய திருமணத்திற்குக் கூட துரைமுருகன் இவ்வளவு வேலை பார்த்திருக்க மாட்டார்.அவ்வளவு கடுமையாக உழைத்து இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக்கிக் காட்டியிருக்கிறார்.

வேலூர் மாநாட்டின் மூலம், செலவுகள் எல்லாம் போக மொத்தம் ரூ. 1.25 கோடி வசூலாகியுள்ளது.

மகளிருக்கு இட ஒதுக்கீடு குறித்து இப்போது பேசுகிறார்கள். திமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி மேயர் தேர்தல்,உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினோம்.

மகளிருக்கு இட ஒதுக்கீடு அவசியம். முதலில் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும். அதன் பிறகு உள் ஒதுக்கீடுகள் குறித்து யோசிக்கலாம்.

மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் வேண்டி, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதியன்று சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் பிரமாண்டமான பேரணிநடத்தப்படும்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தால் தமிழகத்தை இந்தியாவிலேயே ஒரு,மாதிரி மாநிலமாக (மாடல் ஸ்டேட்) மாற்றிக் காட்டுவோம்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களின் தனிநபர் வருமான விஷயத்தில் திமுக ஆட்சியில் நாட்டிலேயே 4வது இடத்தில் தமிழகம் இருந்தது. இப்போது 7வதுஇடத்துக்கு சரிந்துள்ளது.

தமிழகத்தின் விவசாய வளர்ச்சியும் தாழ்ந்துபோய், உணவு தானிய உற்பத்தியும் குறைந்துவிட்டது.

இந்த அழகில் தான் தமிழகத்தை மாதிரி மாநிலமாக மாற்றிவிட்டோம் என்று வாய் கிழிய பேசுகின்றனர். 4வருடங்கள் முடிந்து போன நிலையில் தேர்தல் வரப் போகும் நிலையில் இப்போது தான் ஏகப்பட்ட சலுகைகளை,திட்டங்களை ஜெயலிலதா அறிவிக்கிறார்.

இத்தனை நாள் இவர் என்ன செய்து கொண்டிருந்தார். நிதி ஆதாரமே இல்லாமல் வெறும் வாயால் திட்டங்களைஅறிவிக்கிறார். அவை எல்லாம் வெறும் அறிவிப்புகளாகவே இருந்து கரைந்து போகப் போகின்றன என்பது தான்உண்மை.

தமிழகத்தின் உண்மையான வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால்உண்மையிலேயே இந்த மாநிலத்தை நாட்டுக்கே ஒரு எடுத்துக் காட்டான, மாதிரி மாநிலமாக்கிக் காட்டுவோம்.

அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து,ஒழுக்கக் கேடு நிறைந்த ஒரு அமைப்பாக மாறிவிட்டது. கடத்தலில் ஆரம்பித்து கொள்ளையடிப்பது வரை எல்லாவேலைகளையும் போலீசாரே செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அரசுத் துறையில் வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதை நிறுத்திவிட்டார்கள். மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்குவேலை வாய்ப்பு குறைந்து போய்விட்டது.

போலி வாக்காளர் பட்டியல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனைவரும் சேர்ந்து புகார் கொடுத்தோம்.இந்த காரியத்தைச் செய்த அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பதை மக்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கவேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவதுஉள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிக்கப்படும் என்றார் கருணாநிதி.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X