For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் அடுத்த குறி.. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் !

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ப.சிதம்பரத்தின் மனைவி நளினியைத் தொடர்ந்து, அவர்களது மகன் கார்த்திக் சிதம்பரம் மீதும் அதிமுக புகார்க்கனைகளைத் தொடுத்துள்ளது.

தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி கார்த்திக் சிதம்பரம், பெருமளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகநாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் பைரான் சிங் ஷெகாவத்திற்கு அதிமுக எம்.பி. ஜோதி கடிதம்எழுதியுள்ளார்.

நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, சென்னை வருமான வரித்துறை சார்பில் வழக்கறிஞராகஆஜராகியதை அதிமுக பெரும் பிரச்சினையாக கிளப்பியுள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தவிவகாரத்தைக் கிளப்பி மாநிலங்களவையை நேற்று முழுவதும் செயல்பட விடாமல் முடக்கினர்.

இந்த விஷயம் தொடர்பாக சிதம்பரம் தந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்ட அதிமுக, அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி வருகிறது.

இந் நிலையில், ப.சிதம்பரம் மீது இன்னொரு அம்பை ஏவியுள்ளது அதிமுக. இந்த முறை சிக்கியிருப்பவர்சிதம்பரத்தின் மகன் கார்த்திக். தனது பெரியப்பாவின் பஞ்சாலையில், கார்த்திக் சிதம்பரம் பெருமளவில் வரிஏய்ப்பு செய்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக பைரான் சிங் ஷெகாவத்திற்கு அதிமுக எம்பியும் முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் பலவழக்குகளில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞருமான ஜோதி எழுதியுள்ள கடித விவரம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அண்ணன் லட்சுமணன் செட்டியாருக்குசொந்தமான கற்பகாம்பாள் மில் என்ற பஞ்சாலை உள்ளது.

சமீபத்தில் இந்த ஆலையின் முதன்மையான பங்குதாரராக கார்த்திக் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நியமிக்கப்பட்ட பிறகு இந்த ஆலைக்கு பெருமளவில் வரிச் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும்,புதிய இயந்திரங்கள் வாங்குவதில் பல்வேறு வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் கார்த்திக் சிதம்பரம். தனது தந்தையின் பதவியைப்பயன்படுத்தி இந்த சலுகைகளை அவர் பெற்றுள்ளார்.

கார்த்திக் சிதம்பரத்தின் வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித்துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு பஞ்சாலை வழக்கில்தான் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வருமான வரித்துறை சார்பில்ஆஜராகி, அந்த வழக்கில் தோற்று, நாட்டுக்கு பெரும் நஷ்டத்தைத் தேடிக் கொடுத்தார்.

நளினி சிதம்பரம் வருமான வரித்துறைக்காக அந்த வழக்கில் ஆஜரானது தனக்குத் தெரியாது என்று ப.சிதம்பரம்கூறுவதை ஏற்க முடியாது. வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில் ஆஜராகக் கூடிய வகையில்திறமையான வழக்கறிஞர்கள் நிறைய பேர் சென்னையில் உள்ளனர்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் சென்னையில் தான் உள்ளார்.

இவர்களை எல்லாம் விட்டு விட்டு நளினியை மட்டும் இந்த வழக்கில் ஆஜராக வைத்ததன் பின்னணியைமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் நளினி தோற்றுள்ளார். இதன் மூலம் வருமான வரித்துறைக்கு பல கோடி அளவுக்குஇழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கை சந்தித்த பஞ்சாலை பெரும் லாபத்தை சந்தித்துள்ளது என்றுகூறியுள்ளார்.

எனவே கார்த்தி சிதம்பரம் விவகாரத்தில் நாடாளுமன்றம் தலையிட்டு, உண்மை நிலையை மக்களுக்குத்தெரியப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது அதிமுக.

இந் நிலையில் இன்று இந்த விவகாரம் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் சிதம்பரம் விளக்கம் தந்தார். அவர் கூறுகையில்,

வரி விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையை எதிராக 43 ஜவுளி மில்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடின. அந்தமில்களுக்கு எதிராக வருமான வரித்துறையின் நேரடி வரி விதிப்பு வாரியம் வாதாடியது. இந்த வாரியத்தின் சார்பில் எனதுமனைவி நளினி ஆஜராகி வாதாடினார்.

ஆனால், இந்த 43 மில்களில் கற்பகாம்பாள் மில் இல்லை. இந்த வரி விவகாரத்தில் தவறு மில்களின் பக்கம் தான். மில்களுக்குகருவிகளை மாற்றும்போது அதை வருமானம் சார்ந்த செலவில் சேர்ப்பதா அல்லது மூலதன செலவில் சேர்ப்பதா என்பது தான்இந்த விவகாரத்தில் மையமான விஷயம்.

இந்த வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தோற்றுள்ளது. இதையடுத்து இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தை அப்பீல் செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X