சட்டசபை 21ம் தேதி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டப் பேரவையின் மழைக் காலக் கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி தொடங்குகிறது.இதுதொடர்பான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு முதல் முறையாக பிப்ரவரி மாதம்பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. மார்ச் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது மழைக் காலக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டுள்ளது. 21ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபைகூடுகிறது. இக்கூட்டத் தொடர் அதிகபட்சம் 10 நாட்களுக்கு நடைபெறும் எனத் தெரிகிறது.
சேது சமுத்திரத் திட்டம், பெட்ரோல் விலை உயர்வு, மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கூட்டத்தொடரில் சூடான விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications