For Daily Alerts
டி.வி கடை ஊழியருக்கு மிரட்டல்: ம.பொ.சியின் பேரன் கைது
சென்னை:
டி.வி. கடை ஊழியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக மறைந்த தமிழறிஞரும், முன்னாள் சட்ட மேலவைத் தலைவருமானம.பொ.சிவஞானத்தின் பேரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கடை ஊழியர் கணேசன், சுரேஷின் வீட்டிற்குச் சென்று பாக்கிப் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்கமுடியாது என்று சுரேஷ் கூறியுள்ளார். மேலும், தனது நண்பர்கள் சிலரை கூட்டிக் கொண்டு கடை ஊழியரை துப்பாக்கியைக் காட்டிமிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கடை உரிமையாளல் பிரசாத் போலீஸில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் சுரேஷ், அவரது நண்பர்கள்சாமிதுரை, சிவக்குமார், ரமேஷ், பாலாஜி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |