For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாடுகளிலும் தமிழ் பண்ணிசை விழா: ராமதாஸ் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சிதம்பரம்:

தமிழகத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் தமிழ் பண்ணிசைப் பெருவிழாவை அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளிலும்நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம் சார்பில் சமயக்குரவர்கள் நால்வருக்கு பண்ணிசை ஆராதனை விழா (தியாகராஜர் ஆராதானைவிழாவைப் போல) சிதம்பரத்தில் நடத்தப்பட்டது. இதில் பண்ணிசை மன்ற நிறுவனரும், பாமக நிறுவனத் தலைவருமானராமதாஸ் தலைமை வகித்துப் பேசினார்.

ராமதாஸ் பேசுகையில், இப்போதெல்லாம் கச்சேரிகள் என்ற பெயரில் பாடலோடு பொருந்தாமல், வெறும் இசையை மட்டுமேசங்கீதம் என்ற பெயரால் உருட்டுவதும், ஜால வார்த்தைகள் செய்து காட்டுவதும் நடந்து வருகிறது. இது வெறும் கேளிக்கைநிகழ்ச்சியே தவிர சங்கீத கச்சேரிகள் இல்லை.

தமிழக இசையரங்குகளில் தமிழுக்கு இடமில்லை. அங்கு தெலுங்கும், சமஸ்கிருதமுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. இதைஉணர்ந்த ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை இயக்கத்தைத் தொடங்கினார். அவருக்கு ஆர்.கே.சண்முகம் செட்டியார்உறுதுணையாக இருந்தார். அப்படி வளர்க்கப்பட்ட தமிழிசை இயக்கத்திற்கும், அதை நிறுவிய அண்ணாமலைச் செட்டியார்,சண்முகம்செட்டியார் ஆகியோருக்கு தமிழினம் கடமைப்பட்டிருக்கிறது.

இந்த இயக்கத்தை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாகவே பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம்தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் பண்ணிசை விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.இவற்றிற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

எனவே அடுத்த ஆண்டு முதல் இதே மாதிரியான பண்ணிசை விழாக்களை தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளிலும் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் உண்டு. உலகிலேயே முதன் முதலில்இசையோடு உருவான பாடல்கள் தேவாரப் பாடல்கள் மட்டுமே என்றார் ராமதாஸ்.

முன்னதாக திருமுறை பண்ணிசை ஊர்வலத்தை ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X