சிவாஜி பிறந்த நாளில் சந்திரமுகி வெள்ளி விழா!
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் 1ம் தேதி சென்னையில் சந்திரமுகி படத்தின் வெள்ளி விழாநடைபெறுகிறது.
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான சந்திரமுகி மிகப் பெரும் வெற்றியைப் பெற்று வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது.165 நாட்களைத் தாண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி இப்படம் 175 நாட்களைத் தாண்டுகிறது.
சிவாஜி கணேசனின் பிறந்த நாளும் அன்றுதான் வருகிறது. எனவே அன்றைய தினமே படத்தின் வெள்ளி விழாவை வைத்துக்கொள்ள சிவாஜி பிலிம்ஸ் நிறுவனமும், ரஜினியும் முடிவு செய்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சந்திரமுகி வெள்ளி விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைசிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சந்திரமுகி படத்தில் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ் நினைவுப்பரிசுகளை வழங்குகிறார். அதேபோல இணையதளம் ஒன்றின் மூலம், ரஜினி, ஜோதிகாவின் உடைகளை ஏலம் எடுத்தவர்களுக்குரஜினி தனது கையால் பரிசுகளை வழங்குகிறார்.
விழாவில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட படத்தில் நடித்த அத்தனை கலைஞர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சந்திரமுகி பட வெற்றி விழாவின்போது நான் மனம் திறந்து பேசவுள்ளேன் என்று ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியுள்ளார். எனவேஇந்த விழாவின்போது அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications