For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 250 கோடியில் உழவர் பாதுகாப்புத் திட்டம்: ஜெ. அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடந்த உழவர் மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு ரு. 250 கோடியில்விவசாயிகளுக்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இதில் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற புதிய சலுகையும் அடங்கும்.

இந்த திட்டத்தின் வாயிலாக தங்களது வாழ்வாதாரத்திற்கு வேளாண் தொழில் ஒன்றையே நம்பி வாழும் 86 லட்சம்விவசாயிகள், 51 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயனடைவார்கள்.

இத் திட்டத்திற்காக ஆண்டொன்றுக்கு ரூ. 250 கோடியை அரசு செலவு செய்யும்.

விவசாயிகளுக்கு திருமண உதவி, கருவுற்ற தாய்க்கு பிரசவ செலவுக்கு உதவி, கருச்சிதைவு ஏற்படும் போது உதவி,பிள்ளைகள் கல்வி உதவி, மேல் படிப்பு உதவி, 60 வயது நிரம்பிய ஆதரவற்றோருக்கு ஓய்வுதியம் ஆகியவைஇதில் அடங்கும்.

மேலும் இத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட விவசாயி விபத்தில் இறந்தால் அவரது குடும்பத்திற்கு 1 லட்சம் ருபாய் நிதிஉதவி, விபத்தில் உடல் உறுப்பு இழந்தால் அதற்கேற்ற நிதி உதவி, இயற்கை மரணம் அடைந்தால் ரு. 10,000நஷ்டஈடு,

இறுதிச் சடங்கிற்கு ரு. 2,500 வரை உதவி வழங்கப்படும்.

மேலும் விவாசய தொழிலை மேம்படுத்த நவீன உத்திகளை கையாளும் வகையில் புதிய பயிற்சிகளைவிவசாயிகளுக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்த நீரில் நிறைந்த மகசூலை பெறும் வகையில் வேளாண் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

வணிகம் மற்றும் விரிவாக்க திட்டம்:

இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திலும் குறைந்த பட்சம் ஒரு மகளிர் குழு அமைக்கப்படும்.

இக் குழு உறுப்பினர்களுக்கு விதை உற்பத்தி ஒப்பந்த விவசாயத்துடன் இணைந்த நவீன விவசாய முறைகள்,வேளாண் மற்றும் கால்நடை பராபரிப்பு, மேலாண்மை அகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.

இதனால் 2 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயனடைவர்.

தீவிர வேளாண் விரிவாக்க திட்டம்:

விவசாய பெருமக்கள் வேளாண் தொழில்கள் குறித்த புதிய உத்திகள், நீர் சேமிப்பு, வேளாண் இடுபொருட்கள்,கடன்வசதி அரசு திட்டங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் இத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X