For Daily Alerts
சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 15 அம்ச திட்டம் : பிரதமர்
சண்டீகர் :
சிறுபான்மையினரின் நலனுக்காக விரைவில் 15 அம்ச திட்டம் அமலாக்கப்படும் என காங்கிரஸ் முதல்வர்கள்மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பதவிகளில் காலியாக உள்ள இடங்களில் 80சதவீத இடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும்.
சிறுபான்மையினருக்கான நலவாழ்வு திட்டங்களை மாநில அரசுகள் முறையாக நடைமுறை படுத்த வேண்டும்.சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சிறுபான்மையினர் முன்னேற பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
விரைவில் அவர்களின் நலனுக்காக 15 அம்ச திட்டம் ஒன்றை அறிவிக்கவுள்ளோம் என்றார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |