சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு தடை: ஜனவரி மாதம் அமல்
Subscribe to Oneindia Tamil
மாமல்லபுரம்:
சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு தடை உத்தரவு ஜனவரி மாதம் முதல் அமாக்கப்படுகிறது.
இது பற்றி மாமல்லபுரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவதுஎய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். இது குறித்து பல்கலைகழகங்கள்,கல்லூரிகள், கிராமங்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தபிராச்சரத்தில் நானும் பங்கேற்கிறேன்.
சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிக்கு தடை சட்டம் ஜனவரி மாதம் முதல் அமலாக்கப்படும். புகையிலைதொழிலதிபர்களும், தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் கேட்டுக் கொண்டதையடுத்து உத்தேச தடையைசெயல்படுத்துவதற்கு 3 மாதகால அவகாசம் தரப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications