மீண்டும் காஷ்மீர், பாகிஸ்தானில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர்:
சமீபத்தில் நடந்த நிலநடுக்கத்தின் பீதியில் இருந்தே இன்னும் காஷ்மீர் மக்கள் மீளமுடியாமல் உள்ள நிலையில்மீண்டும் அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 1.53 மணிக்கு மீண்டும் ஊரி, தங்தார் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
இதே போல் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நாட்டிலும் உணரப்பட்டது. வடக்கு இஸ்லாமாபாத் பகுதியில் உள்ளராவல்பிண்டி, லாகூர், பெஷாவர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியே ஓடிவந்தனர்.
ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துபிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இது நிலநடுக்கத்திற்கு பிறகு வரும் கடினமான பின்னதிர்வு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |