கம்பன் ஒரு விஞ்ஞானி: ஆர்.எம்.வீரப்பன்
சென்னை:
கம்பன் ஒரு தத்துவவாதி, விஞ்ஞானி என்று எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளரும், கம்பன் கழகத்தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
சென்னை கங்கை புத்தக நிலையம், கம்பராமாயணத்தின் சுந்தர காண்டத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவெளியிட்டுள்ளது. தமிழ்-ஆங்கில விளக்கவுரையுடன் கூடிய இந்த நூலை தேசிகன் என்ற ஆராய்ச்சியாளர்ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்த நூல் வெளியீடு சென்னையில் நடந்தது. நூலை ராஜ்யசபா உறுப்பினரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகஇணைவேந்தரும், தொழிலதிபருமான எம்.ஏ.எம்.ராமசாமி வெளியிட்டார்.
ஆர்.எம். வீரப்பன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கம்பராமாயணத்தின்அத்துணைப் பகுதிகளும் சுவையானவை. அதன் சுந்தர காண்டத்தை தேசிகன் மொழி பெயர்த்துள்ளார். அவர்தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றவர்.
ஆங்கில மொழியாக்கத்தைப் படிக்கும் போது கம்பன் எந்த அளவுக்கு சிறந்த தத்துவவாதியாகவும்,விஞ்ஞானியாகவும் திகழ்ந்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விஞ்ஞான கண் கொண்டு சுந்தரகாண்டத்தை ஆங்கிலத்தில் வடித்துள்ளார் தேசிகன். அவரைப் பாராட்டியே ஆக வேண்டும் என்றார்.
ராமசாமி பேசுகையில், கம்ப ராமாயணம் ஒரு இலக்கிய கடல். இதில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன.இதை விஞ்ஞானி தேசிகன் மொழி பெயர்த்துள்ளது, கம்பனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தேசிகனைப்பாராட்டும் விதமாக, எங்களது அறக்கட்டளை சார்பாக ரூ. 10,001 பரிசாகக் கொடுக்கப் போகிறேன் என்றார்ராமசாமி.












Click it and Unblock the Notifications