For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடைக்கப்படும் ஏரிகள்! ஆக்கிரமிப்பு கும்பல்களால் விபரீதம்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல ஏரிகளை, அந்த ஏரிக் கரைகளை ஆக்கிரமித்து குடிசை போட்டு வசித்து வரும்கும்பல்கள், தங்களைக் காத்துக் கொள்வதற்காக உடைத்து விடுவதால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தண்ணீரில் மிதக்கும்அவலம் ஏற்பட்டுள்ளது.

சென்னை புறநகர்களில் ஏராளமான ஏரிகள் உள்ளன. போரூர், கொரட்டூர், தாம்பரம், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர்,மதுரவாயில், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை என பல பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய ஏரிகள், கண்மாய்கள் நூற்றுக்கும்அதிகமாக உள்ளன.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே இந்த ஏரிக் கரைகளையும், கண்மாய் கரைகளையும் குடிசைகள் போட்டுஆக்கிரமித்துள்ளனர் பல ஆயிரம் குடும்பங்கள். கரைகளோடு நிறுத்தாமல் ஏரிகள், கண்மாய்கள் வற்றும்போது உள்ளேயும்வீடுகளைக் கட்டிக் கொள்வது இக் கும்பல்களின் வழக்கம்.

இதனால் ஏரிகளில் தண்ணீர் தேங்க இடமில்லாமல் வீணாவதும், வெள்ளம் போன்றவை ஏற்படும்போது ஏரிகளை இக்கும்பல்கள் உடைத்துவிட்டு நீரை வெளியேற்றி தங்கள் வீடுகளைக் காத்துக் கொள்வதும் தமிழகம் முழுவதுமே நடந்து வருகிறது.

இந்த புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு கும்பல்களால் பட்டா நிலங்களில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. காசு கொடுத்து இடம் வாங்கிவீடுகளைக் கட்டியவர்கள் தான் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பத் தொடங்கியுள்ளன. பல காலமாகதண்ணீரையேப் பார்க்காத பல ஏரிகளும், இந்த இரண்டு வார மழையில் நிரம்பித் தளும்புகின்றன.

இதையடுத்து தங்கள் வீடுகளில் நீர் புகாமல் இருக்க ஏரிக் கரைகளை இந்த நில ஆக்கிரமிப்புக் குடும்பங்களைச் சேர்ந்த விஷமிகள்உடைத்து நீரை வெளியேற்றி வருவதாக அதிகாரிகளே குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை புறநகர் ஏரிகள், கணமாய்களின் கரைகளைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டும், பக்காவான கட்டடம்கட்டியும் ஆயிரக்கணக்கானவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கும்பல்களில் பல இந்த நிலத்துக்கு முறைகேடாக பட்டாவும்பெற்றுவிட்டன.

ஏரிகள் நிறைந்து வருவதால், அந்தத் தண்ணீரால் தங்களுக்கு அபாயம் ஏற்பட்டு விடும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்கள்,கரைகளை அவர்களாகவே உடைத்து விட்டு விடுகிறார்கள்.

இதன் காரணமாக வேகமாக வெளியேறும் தண்ணீர் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை பதம் பார்த்து வருகிறது.இப்படித்தான் அம்பத்தூர், திருமுல்லைவாயில், கொரட்டூர், குண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளின் கரைகள் உடைக்கப்பட்டுபல்லாயிரக்காணோர் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூர் ஏரிதான் புறநகர் ஏரிகளிலேயே மிகவும் பெரியது ஆகும். அராபத் ஏரி என அழைக்கப்படும் இந்த ஏரியின்கரைகளில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அனைவரும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர்கள்.

இவர்களது ஓட்டுக்களை மனதில் வைத்து இந்த ஆக்கிரமிப்பாளர்களை எந்த அரசும் அகற்றுவதில்லை.

இதுவரை பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்த ஏரி கடந்த ஆண்டுதான் நகராட்சி நிர்வாகத்திடம்கொடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு குடிநீர் எடுப்பதற்காக இந்த ஏரியைப் பெற்ற நகராட்சி நிர்வாகம் மராமத்து செய்யாமல் விட்டுவிட்டது. இந்தநிலையில் தான் தற்போது பெய்துள்ள கன மழையால் அராபத் ஏரி நிறைந்தது.

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற சுயநலம் காரணமாக ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிக் கரையின் ஒரு பகுதியைஉடைத்து விட்டனர்.

இதனால் 20க்கும் மேற்பட்ட சுற்றுப்புறப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு தண்ணீரில் மிதக்கின்றன.

ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை உடனடியாக அங்கிருந்து அடித்து விரட்டி ஏரிக் கரைகளைப் பலப்படுத்தினால்மட்டுமே தேவையில்லாத வெள்ள பாதிப்பை தவிர்க்க முடியும் என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X