For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரண உதவி கேட்டு மக்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி கேட்டு ஆங்காங்கு சாலை மறியலில் ஈடுபட்டுவருகிறனர்.

வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகிலுள்ள ராஜாஜிநகர், வள்ளுவர் நகர், ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த மக்கள் 300 பேர்நடுரோட்டில் அமர்ந்து நிவாரண உதவி கேட்டு மறியலில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்கள் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புரசை-பெரம்பூர் தாசில்தார் சுப்பிரமணியம் அவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினார். உங்கள் பகுதி பாதிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால் நிவாரண உதவி தர நடவடிக்கை எடுக்கப்படும்என்று உறுதியளித்தார்.

இதையடுத்து செட்டில்மென்ட் பகுதி மக்கள் அதிமுக கவுன்சிலர் சாவித்திரி வீரராகவனை முற்றுகையிட்டனர். இந்த பகுதிகளைஏன் இன்னும் பாதிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கவில்லை என்று கேட்டனர்.

அதற்கு கவுன்சிலர் என்னுடன் வாருங்கள் அதிகாரிகளுடன் பேசுவோம். நான் ஏற்கனவே பட்டியலை அதிகாரிகளிடம்கொடுத்து விட்டேன். அப்படி இல்லையென்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்றார்.

இதே போல் நிவாரண உதவி வழங்குவதில் பாராபட்சம் காட்டுவதாக மணலி நகராட்சியை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

மணலி நகராட்சி சேர்மன் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவிவழங்குவதாகவும், இதில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் மணலி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நகராட்சியை முற்றுகையிட்டனர். இதில் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த 500 பெண்கள்கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவொற்றியூர்-செங்குன்றம் சாலையில்போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்ததும் எண்ணூர் டிஎஸ்பி தாமோதரன், தாசில்தார் பத்மஜா விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் ஜிகார்டு உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து வார்டு மக்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்என்றும், கலெக்டர் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் நகராட்சியில் இன்று வரை நிவாரண உதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மக்கள் மாவட்ட வழங்கல்துறை அலுவலர் லதா நகராட்சிக்கு வந்த போது அவரை முற்றுகையிட்டனர்.

அவரை அனைத்து கட்சி கவுன்சிலர்களும் முற்றுகையிட்டு நிவாரண உதவி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றனர்.இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் டி.சி.விஜயன் தலைமையில் நிவாரண உதவி வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

மதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டதன் காரணமாக மறியல் செய்தவர்களை போலீசார்விரட்டி அடித்தனர். பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரவாயல்-ஆலப்பாக்கம் ஏரி ஆக்கிரபிப்பாளர்கள் ஏரி நீரை வெளியேற்றியதில் வெள்ள நீர் மதுரவாயல் ஊராட்சி பகுதிகுடியிருப்புகளிலும், நெற்குன்றம் பகுதி குடியிருப்புகளிலும் புகுந்ததால் அந்த பகுதி வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதற்கிடையே வெள்ள நீரை வெளியேற்ற 2 கிராம பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான தீர்வு ஏற்படாதநிலையில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து 10,000 வீடுகளுக்கு மேல் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த தகவலறிந்த அமைச்சர் வளர்மதி சம்பவயிடத்தை பார்வையிட்டார்.

மேலும் வளசரவாக்கம் திமுக நகராட்சி தலைவர் மதியழகன், நெற்குன்றம், மதுரவாயல் ஊராட்சி தலைவர் ஆகியோரிடம்போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து வெள்ளநீர் வெளியேற வழி செய்யப்பட்டது. ஆனால் வெள்ள நீர் மெதுவாக வெளியேறுவதால் மதுரவாயல் மக்கள்வாய்க்காலை அகலப்படுத்த உடைத்தனர். இதனால் நெற்குன்றம் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பூந்தமல்லி-கோயம்பேடு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் செய்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். மேலும் கைக்குழந்தையுடன் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஆர்டிஓ உமாமகேஸ்வரி வந்தார். அவரை 100க்கும்மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அவரை விடுவித்தனர்.இதே போல் சம்பவயிடத்துக்குவந்த அம்பத்தூர் தாசில்தாரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X