அமெரிக்கா: ஏர் இந்தியா விமான டயர் வெடிப்பு தீப்பொறி பறக்க தரையிறங்கிய விமானம்
லாஸ் ஏன்ஜெல்ஸ்:
லாஸ் ஏன்ஜெல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டேக்-ஆப் செய்தபோதுஅதன் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த விமானம் மிக அவசரமாக மீண்டும் லாஸ் ஏன்ஜெல்ஸ் விமான நிலையத்தில்தரையிறங்கியது.
லாஸ் ஏன்ஜெல்ஸ் நேரப்படி இரவு 8.33 மணிக்கு அந்த போயிங் 747-400 ரக ஏர் இந்தியா விமானம் 273 பயணிகளுடன்புறப்பட்டது.ரன்வேயில் ஓடி முடித்து டேக்-ஆப் செய்தபோது அதன் டயர் ஒன்று வெடித்தது. இதையடுத்து அந்த விமானத்தை உடனடியாகமீண்டும் தரையிறங்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வான் வெளியில் பறந்தபடியே எரிபொருளைக் கொட்டிய அந்தவிமானம் பெரும் பரபரப்புக்கு இடையே இரவு 10 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.
தரையிறங்கிய அந்த விமானத்தின் டயர் வெடித்துக் கிழிந்திருந்தால் அந்தச் சக்கரத்தின் ரிம் ரன்வேயில் தேய்த்தபடி ஓடியது.இதனால் லேண்டிங்கின்போது அந்த சக்கரத்தில் இருந்து தீப் பொறி பறந்தது.
இந்த விமானம் தரையிறங்குவதற்கு வசதியாக லாஸ் ஏன்ஜெல்ஸ் விமான நிலையத்தில் பிற விமானங்கள் இயக்கப்படுவதுதாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்பரீதியில் மிகவும் சவாலான நிலையில் விமானம் தரையிறங்கியதால் தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள்ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
பிராங்க்பர்ட் வழியாக அந்த விமானம் டெல்லி வர இருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications