For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெஞ்சுவலி: மருத்துவமனையில் விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து நேற்றிரவுஅவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்றே வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விஜயகாந்த் நேற்று தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, இரவு 11 மணியளவில்திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மிஷன் மருத்துவமனைக்குஅவர் கொண்டு செல்லப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பலசோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க டாக்டர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும்தெரிகிறது.

விஜயகாந்த்தை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனை முன் பாதுகாப்புக்காக தனியார் பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏராளமான ரசிகர்கள் மருத்துவமனை முன்பு குவிந்திருப்பதால் அந்தப் பகுதியில் பரபரப்புநிலவி வருகிறது.

Vijaykanth with Kiran

கல்யாண மண்டப பிரச்சனை:

கோயம்பேட்டில் உள்ள தனது கல்யாண மண்டபத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்க முடிவு செய்ததால் விஜய்காந்த்மனச்சோர்வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஓய்வில்லாமல் வெளியூர் பயணம் மேற்கொண்டதாலும், மன அழுத்தம் காரணமாகவும் அவருக்கு நெஞ்சு வலிஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில் கட்டப்படவுள்ள அடுக்கு மேம்பாலத்தின் வரைபட நகலை தனக்கு வழங்க வேண்டும்என்று விஜயகாந்த், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் 3 அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை (அமைச்சர்: டி.ஆர்.பாலு) முடிவுசெய்துள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

முதலில் திட்டத்திற்குத் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக 41இடங்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அதில் விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் ஒன்று.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நில உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை நிாேட்டீஸ் அனுப்பியுள்ளது.இந் நிலையில், நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் தங்களது அசல் பத்திரங்களுடன் பூந்தமல்லி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குஆய்வுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி நில உரிமையாளர்கள் 40 பேரும் தங்களது பத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்று, ஆய்வுக்கெனநியமிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகந்நாதனிடம் பத்திரங்களைக் கொடுத்தனர்.

ஆனால் விஜயகாந்த் மட்டும் நேரில் வரவில்லை. மாறாக அவரது சார்பில் 2 வழக்கறிஞர்கள் வந்திருந்து கோரிக்கை மனுஒன்றை கொடுத்தனர்.

அதில், ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப சொத்து எனது (விஜயகாந்த்) பெயரிலும், எனது குடும்பத்தினர் பெயரிலும்உள்ளது. மேம்பாலம் கட்டுவதற்காக எனது திருமண மண்டபத்தின் எந்த இடத்தை கையகப்படுத்தப் போகிறீர்கள் என்பதுஇதுவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை.

பத்திரிகை விளம்பரம் மூலம் மட்டுமே இது எனக்குத் தெரிய வந்தது. எனக்கு எந்தவித நோட்டீஸும் வரவில்லை. நிலத்தின்உரிமையாளர் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதால் எனது சார்பில் வழக்கறிஞர்களை அனுப்பியுள்ளேன்.

மேம்பாலம் கட்ட எனது நிலத்தின் எந்தப் பகுதியை கையகப்படுத்தப் போகிறீர்கள், கல்யாண மண்டபத்தின் எந்தப் பகுதியைஇடிக்கப் போகிறீர்கள் என்ற விவரம் அடங்கிய வரைபடத்தை என்னிடம் கொடுத்தால், அதைப் பரிசீலித்து, எந்தப் பகுதிமேம்பாலம் கட்டும் பகுதியில் வருகிறது என்பதை அறிந்து அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்கிறோம்.

அதேபோல, மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை என்னிடம் கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மனுவுடன் எனது நிலம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட 17 ஆவணங்களின் நகல்களை உங்களின் பரிசீலனைக்காக தாக்கல்செய்துள்ளோம். விரைவில் எங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தக் கூடிய பகுதியின் வரைபடம் மற்றும் பீல்டு மேப் ஆகியவற்றைதந்தால் நலமாயிருக்கும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

முழு மண்டபம் இடிப்பில்லை:

இதற்கிடையே, ஆண்டாள் அழகர் கல்யாண மண்டம் முழுமையாக இடிக்கப்பட மாட்டாது. மண்டபதத்தில் குறிப்பிட்ட ஒருபகுதிதான் இடிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதற்கிடையே தனக்கு உடல் நிலை எல்லாம் நன்றாகவே இருப்பதாகவும் வழக்கமான செக்-அப்புக்காகவே மருத்துவமனைக்குவந்ததாகவும் விஜய்காந்த் நிருபரிடம் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X