For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம்: ஜெ.வின் அதிரடி தேர்தல் சலுகை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான மிகப் பெரிய தேர்தல் சலுகையை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல சலுகைகளை அள்ளி வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதா, மேலும் ஒரு அதிரடியானஒரு சலுகையை அறிவித்துள்ளார். அது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் புதிய மனைப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்போது விதிமுறைகளின்அடிப்படையில் மனைப் பிரிவுகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

அங்கீகாரம் பெறப்பட்ட மனைப் பிரிவுகளுக்கு சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதி, மழை நீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள்செய்து தரப்படுகின்றன. ஆனால் அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளுக்கு இந்த அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.

இதைத் தொடர்ந்து அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளை முறைப்படுத்த கடந்த 1999ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி புதியஅரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் கூறப்பட்ட பல நிபந்தனைகளை தளர்த்தி 16.6.2000, 1.2.2001 ஆகிய நாட்களில் புதியஅரசாணைகள் வெளியிடப்பட்டன.

தற்போதை நிலைப்படி, அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகளில், வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட நிலத்தின் உரிமை மாற்றத்தைபத்திரப் பதிவு செய்ய இயலாது.

இந்த நிபந்தனைகள் காரணமாக அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் வீடுகளைக் கட்டியுள்ள பொதுமக்கள், தங்களதுமனைகளைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும், வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து,தங்களது மனைப் பிரிவுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.

இதனைக் கவனமாக பரிசீலித்த பின்னர், சென்னை பெருநகரப் பகுதிக்கு அப்பால் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில்அமைந்துள்ள ஒப்புதல் பெறாத வீட்டு மனைகளை முறைப்படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது.

* குடும்பப் பாகப் பிரிவினைக்காக அல்லது வேறு நோக்கத்திற்காக 8 மனை வரையிலும் உட்பிரிவினை செய்வது உட் பிரிவாககருதப்பட மாட்டாது.

* 1.1.1980ம் ஆண்டுக்கு ன்னர் உருவாக்கப்பட்டு, ஒப்புதல் பெறாத மனைப் பிரிவுகளை அனுமதி பெற்ற மனைப்பிரிவுகளுக்கு நிகராகக் கருதி அவற்றுக்கு திறந்தவெளி ஒதுக்கீட்டுக்கட்டணம் வசூலிக்கத் தேவையில்லை.

* 1.1.1980ம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட, ஒப்புதல் பெறாத தனியார் மனைப் பிரிவுகளில் அமைந்துள்ள வீட்டுமனைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முறைப்படுத்தப்படும்.

* இந்த சலுகையைப் பெற, தடை செய்யப்படாத பகுதிகளில் மனைப் பிரிவுகள் அமைந்திருக்க வேண்டும், பெரிய சாலைஅருகே மனைப் பிரிவு அமைந்திருக்க வேண்டும், மனை உரிமையாளர் உள்ளாட்சி அமைப்புக்கு உரிய மேம்பாட்டுக்கட்டணத்தைக் கட்டியிருக்க வேண்டும்.

* மாநகராட்சிப் பகுதிகளில் சதுர மீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் சதுர மீட்டருக்கு ரூ. 10ம் , முன்னாள்பேரூராட்சிப் பகுதிகளில் சதுர மீட்டருக்கு 3 ரூபாயும் முறைப்படுத்துதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த சலுகை காரணமாக 2569 மனைப் பிரிவுகளில் மனைகள் வாங்கியுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மனை உரிமையாளர்கள்பெரும் பயன் அடைவர். அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைய இது உதவும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த அதிரடிச் சலுகை சென்னை மக்களுக்குக் கிடைக்காது. இருப்பினும் மிகப் பெரிய ஓட்டு வங்கியான இதரதமிழகப் பகுதிகளை பெரிய அளவில் இந்த சலுகை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X