சும்மா நச்சுனு இருக்கு!: இது எப்டி இருக்கு?
சென்னை:
அதிமுக, மதிமுக கூட்டணியைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் விதம் விதமான போஸ்டர்களை ஒட்டி மதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதில் பெரும்பாலும் சன் டிவியின் பிரபலமான விளம்பரங்களின் வாசகங்களை வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணி அமைந்ததால் முதல் முறையாக சட்டசபையில் நுழையப் போகிறோம், அதுவும் மிகப் பெரிய உறுப்பினர் பலத்துடன் நுழையப் போகிறோம் என்ற முடிவுக்கு மதிமுகவினர் வந்து விட்டனர்.இந் நிலையில் சென்னையில் மதிமுக சார்பில் வித விதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதா, வைகோ ஆகியோரின் படங்களுடன் உள்ள இந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்தான் இங்கே கவனிக்கத்தக்கவை.
சன் டிவி குழுமத்தின் தமிழ் முரசு மாலை நாளிதழுக்காக சன்டிவியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற விளம்பர வாசகமான சும்மா நச்சுன்னு இருக்கு என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள போஸ்டர்தான் இருப்பதிலேயே படு கலக்கலாக உள்ளது.
அதே போல சன் டிவி வாங்கிவிட்ட தினகரன் நாளிதழுக்கான விளம்பரமான சூப்பர்மா..வையும் மதிமுகவினர் விடவில்லை. அதிமுக-மதிமுக கூட்டணி படு சூப்பர்மா... என்றும் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தங்களது கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்துக் கூறுகையில்,
தமிழகம் முழுவதும் கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுகவினரின் வெற்றி வாய்ப்பைப் பறித்தது மதிமுக. அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பான வாக்கு வங்கியைக் கொண்டு மதிமுக வலுவுடன் திகழ்கிறது.
அதிமுக கூட்டணியில்தற்போது எங்களுக்கு 35 தொகுதிகள் கிடைத்துள்ளது. 35 தொகுதிகளும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாகவே எங்களுக்கு கிடைக்கும். எனவே 35லிலும் நாங்களே வெற்றிபெறுவோம்.
வரும் சட்டசபையில், மதிமுகதான் 2வது பெரிய கட்சியாக விளங்கும் என்றார் மணிமாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications