ஏகப்பட்ட புதுமுகங்களை களமிறக்கும் பாமக
சென்னை:
31 இடங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியலில் நிறைய புதுமுகங்களுக்குவாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் பாமக சார்பில் 20 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் ஜி.கே.மணி,காடுவெட்டி குரு, வேல்முருகன், கே.ஆறுமுகம், கோ.ரவிராஜ் உள்ளிட்ட 7 பேருக்குமட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற அனைவரும் புதுமுகங்கள்.கடந்த முறை பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட்ட ஜி.கே.மணி இந்த முறைமேட்டூர் தொகுதிக்கு மாறியுள்ளார்.
எடப்பாடி தொகுதியில் நான்கு முறை (2 முறை அதிமுக சார்பில், 2 முறை பாமகசார்பில்) வெற்றி பெற்றவரான ஐ.கணேசனுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பெண் வேட்பாளர்தான் பாமக பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் கூறுகையில், பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்க வேண்டும்என்று எல்லோரு பேசுகிறோம். ஆனால் அந்த மன நிலைக்கு பெரும்பாலானஅரசியல் கட்சிகள் இன்னும் வரவில்லை என்பதே உண்மை. பாமகவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.
மேலும், கடந்த முறை போட்டியிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் மீண்டும்வாய்ப்பு தர முடியவில்லை.
காரணம், கடந்த முறை நாங்கள் வென்ற பல தொகுதிகள் இம்றை கூட்டணிக்கட்சிகளுக்குப் போய் விட்டது. எனவேதான் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கமுடியவில்லை என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications