For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தி படம், கண்ணீர் மல்க ராஜினாமா: அமெரிக்கா நாராயணன் அசத்தல்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் போக்கு பிடிக்காமல், தலைமை அலுவலகச்செயலாளரான அமெரிக்கா நாராயணன், கண்ணீர் மல்க ராஜினாமா கடிதத்தை காந்திபடத்தின் கீழ் வைத்து அதை கட்சியிடம் ஒப்படைத்தார்.

சென்னையைச் சேர்ந்த நாராயணன், இடையில் சிறிது காலம் அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தவர். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நிாராயணன், காங்கிரஸ்கட்சியில் சேர்ந்தார். அதன் அறிவியல் பிரிவின் தலைவராக இருந்தார்.

மூப்பனார் உள்பட தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த அனைவருடனும்நெருக்கமாக இருக்க முயன்று தோற்றவர். இவருக்கென்று கோஷ்டியும் கிடையாது.இதனால் கட்சியில் இவரை மதிப்பதும் கிடையாது.

காங்கிரஸ் கட்சியில் தலைமைக் கழக செயலாளர் என்ற டம்மி பதவி தந்து உட்காரவைத்து அழகு பார்த்து வந்தனர்.

பலமுறை தேர்தல்களில் சீட் கேட்டும் அவருக்குக் கிடைக்கவில்லை. அவருக்கென்றுஎந்தத் தலைவரின் ஆதரவும், பின்னணியும் இல்லாததால் பொறுமையிழந்து, பொங்கிஎழ முடியாமல் இருந்து வந்தார் நாராயணன்.

இந் நலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்எழுந்துள்ள குழப்பமான சூழ்நிலையில், கட்சியிலிருந்து விலகி விட்டார் அமெரிக்காநாராயணன்.

அதுவும் எப்படி? சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர் தான் எழுதிய ராஜினாமாகடிதத்தை அங்குள்ள காந்தி படம் முன்பு வைத்தார். காந்தியை மனமுருக கும்பிட்டஅவர் கண்களில் நீர் மல்க, தேம்பித் தேம்பி அழுதபடி அக்கடிதத்தை கட்சிநிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

பின்னர் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே போய் பொட்டை வெயிலில் நின்றபடிசெய்தியாளர்களைச் சந்தித்தார் அமெரிக்கா நாராயணன்.

அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் போக்கு சரியில்லை. பண வசதிபடைத்தவர்கள், ஆள் பலம் உள்ளவர்கள், சமூக விரோதிகளின் பலத்துடன்உள்ளவர்களுக்குத்தான் இங்கே சீட் கொடுக்கப்படுகிறது. என்னைப் போல கட்சிக்காகபாடுபடுபவர்களுக்கு சீட் மறுக்கப்படுகிறது.

எனவேதான் நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விட்டேன். மைலாப்பூர்தொகுதியில் நான் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றார்நாராயணன்.

அட, நாராயணா!

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X