36 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
காவல்துறை அதிகாரிகளைத் தொடர்ந்து தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆட்சி பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர், டிஜிபிஉள்ளிட்ட பல்வேறு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனர்.தற்போது பல்வேறு துறை செயலாளர்கள், ஆணையர்கள் மட்டத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டிருந்த பலஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சசிகலா ஆட்களின் மிடாஸ் மதுபான ஆலை சரக்குகளை விற்றுத் தருவதில் தீவிரமாகாட்டிய டாஸ்மாக் தலைவர் அய்யரும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.
மாஜி முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்த அதிகாரிகள், ஒழுங்குமுறை ஆணையர் என்பது போன்ற டப்பா பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளன.
பதவியே தரப்படாமல் நீண்ட காலமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுஜெயலலிதாவால் பழி வாங்கப்பட்ட மூத்த தலித் ஐஏஎஸ் அதிகாரிகளான சிவகாமி,சக்தி ஸ்கந்த தாஸ் போன்ற அதிகாரிகளுக்கு மிக முக்கிய பதவிகள் தரப்பட்டுள்ளன.
அதே போல கருணாநிதியின் செயலாளராகப் பணியாற்றிய ஒரே காரணத்தால்ஒழுங்கு முறை ஆணையராக ஒதுக்கப்பட்ட இறையன்பு ஐஏஎஸ், செய்தித் துறைசெயலாளராக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டராக இருந்து அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்து தேர்தல்ஆணையத்தால் தூக்கப்பட்ட சுகுமாறனுக்கு கூடுதல் செயலாளர் என்ற இறக்கப்பட்டபதவி தரப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்ட அதிகாரிகள்: (அடைப்புக்குறிக்குள் அவர்கள் வகித்த முந்தையபதவிகள்)
ஷீலா பாலகிருஷ்ணன் - ஒழுங்குமுறை சிறப்பு ஆணையர், சேலம் (முதல்வரின் 1வதுசெயலாளர்)
பி.செல்வம் - பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை (மது விலக்கு ஆயத்துறை)
மச்சேந்திரநாதன் - கூட்டுறவு-உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் (இதேதுறையில் சிறப்புச் செயலர்)
எஸ்.மாலதி - வணிக வரித்துறை சிறப்பு ஆணையர் (பொருளாதாரம் மற்றும்புள்ளியியல் துறைசிறப்பு ஆணையர்)
தேவராஜ் - வணிக வரித்துறைமற்றும் பதிவுத்துறைச் செயலர் (மிகவும் பிற்பட்டோர்துறை சிறப்பு ஆணையர்)
ராஜரத்தினம் - பொதுப்பணித்துறை செயலர் (வணிக வரி, பதிவுத் துறை செயலர்)
சுப்புராஜ் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (தொழிலாளர் நலத்துறைஆணையர்)
சிவகாமி - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் (ஒழுங்கு முறைஆணையர் - சென்னை)
சக்தி காந்ததாஸ் - தொழில்துறை செயலாளர் (எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின்திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர்)
சன்வத் ராம் - சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகதலைவர்-நிர்வாக இயக்குநர் (பொது மறுவாழ்வுத் துறை செயலர்)
கணேசன் - மதுவிலக்கு, ஆயத்துறை செயலர் - டாஸ்மாக் தலைவர் (வேளாண்விற்பனைப் பிரிவு ஆணையர்)
அலாவுதீன் - நெடுஞ்சாலைத் துறை செயலர் (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்)
ராம் மோகன் ராவ் - நில நிர்வாக சீரமைப்புத் துறை (நெடுஞ்சாலைத் துறை பூம்புகார்கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர், நிர்வாக இயக்குநர்)
பழனியப்பன் - சமூக நலம், ஊட்டச்சத்துத் துறை செயலர் (பொதுப் பணித்துறைசெயலர்)
ஜக்மோகன் சிங் ராஜு - தொழில்துறை ஆணையர், தொழில், வணிகத் துறைஇயக்குநர் (தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம்)
நிரஞ்சன் மார்டி - நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் (நில நிர்வாக சீர்திருத்தஆணையர்)
வெங்கட்ரமணன் - ஒழுங்கு முறை ஆணையர், தஞ்சை (முதல்வரின் செயலர்2)
வெ. இறையன்பு - செய்தி, சுற்றுலாத்துறைச் செயலர் (ஒழுங்குமுறை ஆணையர்,மதுரை)
ஜோதி ஜெகராஜன் - பொது, மறுவாழ்வுத்துறை செயலர் (உள்துறை சிறப்புச் செயலர்)
சந்தீப் சக்சேனா - தமிழ்நாடு சர்க்கரைக் கழக நர்வாக இயக்குநர், ஆணையர்
எஸ்.அய்யர் - ஒழுங்கு முறை ஆணையர், நெல்லை (டாஸ்மாக் தலைவர்)
காசி விஸ்வநாதன் - உள்துறைச் சிறப்புச் செயலர் (கால்நடை பராமரிப்புத் துறை,பண்ணை,மீன்வளத்துறை சிறப்புச் செயலர்)
சண்முகம் - ஒழுங்குமுறை ஆணையர், ராமநாதபுரம் (போக்குவரத்துத் துறை செயலர்மற்றும் ஆணையர்)
ஜவஹர் - ஆட்சித் தலைவர், நாகப்பட்டனம் (பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர்,சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலர்)
கண்ணா - வருவாய்த்துறை இணைச் செயலர் (தமிழ்நாடு சர்க்கரைக்கழக நர்வாகஇயக்குநர்)
சுகுமாறன் - பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைகூடுதல் செயலர் (மாவட்ட ஆட்சித் தலைவர், சேலம்)
டாக்டர் ராதாகிருஷ்ணன் - ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் (நாகை மாவட்ட ஆட்சித்தலைவர்)
டாக்டர் சொர்ணா - வேளாண்துறை துணைச் செயலர் (முதல்வரின் துணைச் செயலர்,முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலர்)
விஜயக்குமார் - கால்நடை பராமரிப்பு, பண்ணை, மீன் வளத்துறை இணைச் செயலர்(தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குநர்)
இளங்கோவன் - தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு நறுவன தலைவர், நர்வாகஇயக்குநர் (கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, காதித்துறை செயலர்)
பாலகிருஷணன் - தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைவர் (தமிழ்நாடு தொழில்தலீட்டுக் கழக தலைவர்)
சிவதாஸ் மீனா - சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் (சென்னை மாநகராட்சிஇணை ஆணையர்)
ஸ்வரண் சிங் - தமிழ்நிாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு பாடநூல்நிறுவனம், நிர்வாக இயக்குநர்)
கருத்தையா பாண்டியன் - தமிழ்நாடு மருத்துவசேவைக் கழக நிர்வாக இயக்குநர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர்)
சுப்ரியா சாஹு - தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்ட இயக்குநர்,உறுப்பினர்-செயலர் (ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், சுகாதாரம், குடும்ப நலகூடுதல் செயலர்)
வி.மூர்த்தி -தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவன நிர்வாக இயக்குநர்(ஒழுங்குமுறை ஆணையர், தஞ்சை)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications