For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க கோவிலுக்கு வெள்ளி யானை வாகனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அமெரிக்காவில் உள்ள இந்து கோயிலுக்கு வெள்ளியால் ஆன அழகிய யானை வாகனம் சென்னையிலிருந்துஅனுப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் கிரேட்டர் சிகாகோ பகுதியில் உள்ள பாலாஜி கோயிலுக்கு தேவையானவெள்ளி பொருள்களையும், வெள்ளியால் ஆன யானை வாகனத்தையும் மைலாப்பூரில் உள்ள சுக்ரா ஜூவல்லரிசெய்து அனுப்பியுள்ளது.

வெள்ளியால் ஆன யானை பீடத்துடன் சேர்ந்து சுமார் 35 கிலோ எடையும், நாலரை அடி உயரம் கொண்டது.நமது நாட்டின் சிறப்பு மிக்க சிற்ப கலைநுட்பத்தை வெளிபடுத்தும் வகையில் இந்த யானை வாகனம்உருவக்கப்பட்டுள்ளது.

இதை போலவே ஹூஸ்டனில் உள்ள மீனாட்சி கோயிலுக்கு தேவையான பூஜைப் பாத்திரங்களையும், விக்கிரகக்கவசங்களையும் இந் நிறுவனம் தாயரித்து அனுப்பியுள்ளது.

இந்நிறுவனம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் அட்லாண்டா, மிஸிஸிபி உள்பட வெளிநாடுகளில்உள்ள 100க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு தேவையான பூஜைப் பாத்திரங்கள், விக்கிரகக் கவசங்கள்,வாகனங்கள் போன்றவற்றைச் செய்து அனுப்பியுள்ளது.

இதைத் தவிர சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் இங்கிருந்து வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பூஜைப்பொருள்கள் சென்று கொண்டிருக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X