For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் நிறுவனர் மகனுக்கு திமுக எம்.பி. பதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை :

தினகரன் நாளிதழின் நிறுவனர் கே.பி.கந்தசாமியின் மகன் கே.பி.கே. குமரனுக்கு திமுகராஜ்யசபா எம்.பி. சீட்டை வழங்கியுள்ளது.

தினகரன் நாளிதழை நிறுவியர் திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவிளங்கிய கே.பி.கந்தசாமி. பின்னர் அவர் வைகோவோடு மதிமுகவுக்குப்போய்விட்டார்.

K.B.K.Kumaran

மறைந்த கந்தசாமியின் தினகரன் நாளிதழைத்தான் சன் டிவி நிர்வாகம் வாங்கி, புதியபொலிவுடன் வெளியிட்டு வருகிறது.

இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. நடிகர் சரத்குமார் திமுகவிலிருந்துவெளியேற தினகரன் நாளிதழ் கைமாறியதும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

காரணம், சரத்குமாரின் சகோதரியைத்தான் கே.பி.கந்தசாமி மணந்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கு.

மேலும் கந்தசாமியின் மகன் கே.பி.கே.குமரன், தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்திஆதித்தனின் மகள் அனிதாவைத் தான் மணந்துள்ளார்.

தனக்கே கூடத் தெரியாமல் தான் தினகரனை குமரன் விற்று விட்டதாக சிவந்திஆதித்தனும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந் நிலையில் நடிகர் சரத்குமார் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள ராஜ்யசபாசீட்டுக்கு கே.பி.கே.குமரனை திமுக நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திக தலைமைக் கழகம் இன்றுவெளியிட்டது. திமுக வேட்பாளராக குமரன் போட்டியிடுவார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி.

எந்த சீட்டை வேறு யாருக்காவது, அதாவது முதலில் ஒப்பந்தம் செய்தபடி இந்தியகம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்திருந்தால் தேவையில்லாத சர்ச்சை எழுந்திருக்கும்.சீட்டை நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த குமரனுக்கு கொடுத்துள்ளதன் மூலம் திமுகவைவிட்டு சரத்குமார் விலகியதால் ஏற்பட்ட சிறிய பாதிப்பும் சரி ய்ெயப்பட்டுவிட்டது.

மேலும், குமரனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கித் தரவும் திமுக தலைமைமுடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படிச் செய்வதன் மூலம் நாடார்சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் மத்திய அமைச்சராக இல்லை என்ற பிரசாரத்தைமுறியடிக்க முடியும் என்றும் திமுக கருதுகிறது.

கருணாநிதிக்கு குமரன் நன்றி:இந் நிலையில் தனக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ள முதல்வர்கருணாநிதிக்கு கே.பி.கே.குமரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குமரன் கூறுகையில்,

தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்பதவிக்குத்தேர்ந்தெடுக்கப்படுவது பெருமைக்குரியது. இந்தப் பதவியின் மூலம் தமிழகத்திற்கும்,தமிழக மக்களுக்கும் என்னால் ஆனதை செய்ய முயற்சிப்பேன் என்றார் குமரன்.

முதலில் இந்த சீட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.சட்டசபைத் தேர்தலில் கேட்ட எண்ணிக்கையில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம், எம்.பி. சீட் தருவதாக கூறித்தான் திமுக தலைமைசமாதானப்படுத்தியது.

ஆனால் இப்போது இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர் ஒன்றரை ஆண்டுகளுக்குமட்டுமே பதவி வகிக்க முடியும் என்பதால் இதில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட்விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தானே போட்டியிடதிமுக முடிவு செய்ததாகத் தெரிகிறது.

ராஜ்யசபா எம்.பியாகும் கே.பி.கே. குமரன் எம்பிஏ படித்தவர். 40 வயதான இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X